சகல சௌபாக்கியங்களையும் பெற்று உங்களுடைய வீடு சுபிட்சம் அடைய 108 நாட்கள் இந்த பூஜையை செய்தால் போதும். வீட்டில் உள்ள எல்லா கஷ்டங்களும் தீரும்.

வீடு என்பது வெரும் பணம் காசு நிறைந்து, செங்கற்களால் கொண்டு கட்டப்பட்ட கட்டிடமாக மட்டும் இருக்கக்கூடாது. அந்த வீட்டில் 16 வகையான செல்வங்களும், சுபிட்சமும் நிறைந்து இருக்க வேண்டும். இதை வேண்டித்தான் தினமும் இறைவனை வழிபாடு செய்கின்றோம். இல்லம் இனிமையாக எத்தனையோ வழிகள் ஆன்மிக ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் வழிபாடு சிவபெருமானை நினைத்து செய்யக்கூடிய வழிபாடு. மிக மிக சுலபமான முறையில் இந்த வழிபாட்டை கொஞ்சம் சிரமப் பட்டாவது, பக்தியோடு நம்பிக்கையோடு, செய்து முடித்துவிட்டால் உங்களுடைய இல்லம் இனிமையாக மாறும். 16 வகையான செல்வங்களும் பெற்று உங்களுடைய பரம்பரையே சுபிட்சம் அடையும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடருவோம்.

maragatha-lingam

இந்த பூஜைக்கு உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய அளவு சிவலிங்கமும், ஒரு ருத்ராட்சமும் அவசியம் தேவை. சிவலிங்கத்துடன் நந்திதேவரும் இருந்தால் சிறப்பு. நந்திபகவான் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு சிவலிங்கத்தையும், ஒரு ருத்ராட்சத்தை வைத்து இந்த பூஜையை செய்து வரலாம்.

உங்களுக்கு சுலபமாக, போலி இல்லாத, எத்தனை முக ருத்ராட்சம் கிடைத்தாலும் பரவாயில்லை. அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜான் அளவிற்கு குறைவாக இருக்கும் சிவலிங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் சிவலிங்கம் உள்ளது என்றால், பாரம்பரியமாக வழிபட்டு வரும் அந்த சிவலிங்கத்தையும் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா என்ற சந்தேகம் தேவையில்லை. தாராளமாக பூஜை அறையில் சிறிய அளவிலான சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யலாம் என்று சொல்கிறது சாஸ்திரம்.

ruthratcham

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து சிவலிங்கத்திற்கும் ருத்ராட்சத்திற்க்கும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின்பு சுத்தமான தண்ணீரை ஊற்றி அலம்பி சிவலிங்கத்திற்கும் ருத்ராட்சத்திற்கும் சந்தன குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் ஒரு சிறு தட்டின் மேல் சிவலிங்கத்தையும் ருத்ராட்சத்தையும் ஒன்றாக வைத்து விடுங்கள்.

முடிந்தால் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யலாம். முடியாதவர்கள் வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். 108 முறை பஞ்சாக்ஷர மந்திரமான ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். கட்டாயம் சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனமாக படைக்கப்பட வேண்டும். வெரும் உலர் திராட்சைகளை பிரசாதமாக வைத்தால் கூட போதும். (இந்த பூஜைக்கும் வெறும் 2 வில்வ இலைகள் கிடைத்தால் கூட போதும் 108 நாட்களும் அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது.)

praying-god1

தினமும் காலை எழுந்து இந்த பூஜையை செய்து முடித்து விட்டு அதன் பின்பு காலை உணவு எடுத்துக் கொள்வது மிகமிக நல்லது. காலை 8 மணிக்கு முன்பு எப்போது வேண்டுமென்றாலும் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யலாம். உங்கள் இல்லம் சுபிட்சம் அடைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்து எம் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பூஜையை செய்து வந்தால் போதும். இல்லத்தில் இருக்கும் அனைத்து இன்னல்களும் கண்ணுக்குத் தெரியாமல் காணாமலேயே போய்விடும். ஓம் நமசிவாய.