இதையெல்லாம் கூடவா நல்ல சகுனம்னு சொல்லுவாங்க? சில கேள்விபடாத சகுன சாஸ்திரத்தின் வியக்க மற்றும் சிந்திக்க வைக்கும் தகவல்கள் இதோ!

nadaswaram-lakshmi
- Advertisement -

சில விஷயங்கள் நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வரும். அவற்றை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடவும் முடியாது. நிச்சயம் பலிக்கும் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அந்த வகையில் அடங்கி இருக்கும் சகுன சாஸ்திர பலன்களில் இது வரை நமக்குத் தெரியாத சில விசித்திரமான மற்றும் வியக்க வைக்கும் தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

cat

நம் முன்னோர்கள் காலம் காலமாக நம்பி வந்த சில விஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் கவனிக்கும் பொழுது நமக்கு ஒருபுறம் சிரிப்பும் வரும், ஒருபுறம் சிந்திக்கவும் தூண்டும். அது போன்று இப்போது இந்த பதிவில் கூறப் போகும் விஷயங்கள் நமக்கு சிரிப்பையும், சிந்தனையையும் தூண்ட வல்லது என்று கூறுவதில் ஆச்சரியமில்லை.

- Advertisement -

நம்மில் பலரும் கொசுக்கடி தாங்க முடியாமல் மொட்டை மாடியில் சென்று தூங்குவோம். மொட்டை மாடியில் ஜில்லென வீசும் காற்றுக்கு சுகமான தூக்கமும் வந்து விடும். காலையில் சுள்ளென சூரியன் நம் மீது பட்டாலும் நம்மால் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளவே முடியாத நிலை ஏற்படும். அது போல் தூக்கத்தில் சூரியன் நம்மில் விழுவது கூட தெரியாமல் தூங்கக் கூடாது என்கிறது சகுன சாஸ்திரம். அப்படி தூங்கும் பொழுது சூரியன் நம் மேல் விழுந்தால், நாம் செய்கின்ற எல்லா காரியங்களும் தடைகளாக வந்து சேருமாம். இது நமக்கு தரித்திரத்தை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

kuthu-vilakku

நாம் புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேற போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது சிலர் தீபத்துடன் நுழைவார்கள். அது போல் செய்யும் பொழுது நீங்கள் புறப்பட்ட வீட்டிலிருந்து தீபத்தை ஏற்றி கொண்டு வரக் கூடாது. புதிய வீட்டிற்கு வந்ததும் வாசலில் வைத்து விளக்கேற்றி பின் எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும் என்கிறது சகுன சாஸ்திரம். இதனால் அந்த இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விளக்கின் ஒளி அல்லது ஒளி தரக்கூடிய ஜோதி வடிவங்கள் சுப சகுனங்கள் என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம். அவ்வகையில் நாம் தூங்கி எழுந்திருக்கும் பொழுது நேரே தீப ஜோதி அல்லது சிறிய மின் விளக்கு எரிய வேண்டும் என்கிறார்கள். முதல் முதலாக விழித்ததும் தீப ஜோதியாகிய சுப சகுனத்தில் விழிப்பது அன்றைய நாள் முழுவதும் சுப பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

free-hair1

நீங்கள் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் புறப்படும் பொழுது கூந்தலை விரித்துக் கொண்டு யாராவது உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வது நல்லதாம். இது போல் கால் தடுக்கும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து விட்டு, தண்ணீர் அருந்தி விட்டு செல்லுமாறு கூறுவார்கள். அதே போல தான் இந்த விஷயமும் என்கிறார்கள். அதில் விதி விலக்காக நீங்கள் பார்க்கும் தலைவிரி கூந்தலில் பூக்கள் சூடியிருந்தால் அது சுப சகுனமாக பார்க்கப்படுகிறது. அதனால் தாராளமாக நீங்கள் வெளியே செல்லலாம் என்கிறார்கள்.

- Advertisement -

அது போல் காலையில் வேலைக்கு அல்லது சுபகாரிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும் முன் மங்கல ஒளியான நாதஸ்வர சத்தத்தையும், தாள சத்தத்தையும் கேட்டு விட்டு சென்றால், செல்லும் காரியம் வெற்றி அடையுமாம். இதற்காகவே இந்த சத்தத்தை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஹா ஹா..

nadaswaram-melam

அடுத்ததாக உங்களை வழி அனுப்புபவர்கள் நல்ல வார்த்தை சொல்லி வழியனுப்பினால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. இவைகள் நம் முன்னோர்கள் காலம் காலமாக தங்களின் வாழ்வியலோடு கலந்து உணரப்பட்ட நம்பிக்கைகள். இவைகள் பலிக்குமா? பலிக்காதா? என்பதை விட கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? கல்லை கல்லாக பார்ப்பவர்களும் உண்டு, கடவுளாக பார்ப்பவர்களும் உண்டு. இதில் நீங்கள் யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஸ்ரீ ராம ஜெயத்தை முறையாக எப்படி எழுதுவது? எழுதியதை என்ன செய்வது? என்ன செய்தால் வேண்டியது நிறைவேறும்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -