சாய் பாபா அபிஷேகம் – பாடல்

Sai baba tamil song
- Advertisement -

மக்களோடு மக்களாக கலியுகத்தில் வாழ்ந்து காட்டிய ஒரு யகபுருஷன் சாய் பாபா. மதங்களை கடந்து மக்களின் மனதில் நிலைபெற்ற ஒரே தெய்வேம் இவர் தான் என்றால் அது மிகையாகாது. தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்திலும் அதன் பிறகும் தன் பக்தர்களை பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் இந்த மகானை வணங்கினால் துன்பங்கள் தொலைந்துபோகும் என்பது நம்பிக்கை. நொடிக்கு நொடி பல அற்புதங்கள் நிகழ்த்தும் சாய் பாபாவின் அபிஷேக பாடல் இதோ.

வீட்டில் நாம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சாய் பாபா சிலைக்கு அபிஷேகம் செய்கையில் இந்த பாடலை ஒலிக்க செய்யலாம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு உருவம் உண்டு. ஆனால் நாம் சாய் நாதனை எந்த உருவில் பார்க்கிறோமோ அந்த உருவில் தெரிவார் என்று பலரும் கூறியுள்ளனர். சிவனாய் பார்த்தால் அவர் சிவனாக காட்சி தருவார், விஷ்ணுவாய் பார்த்தால் அவர் விஷ்ணுவாக காட்சி தருவார். ஆகையால் நாம் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்கையில் நமது இஷ்ட தெய்வத்தையும் நினைத்துக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -

வியாழக்கிழமைகளில் நாம் ஒரே ஒரு நிமிடம் முழு மனதோடு பாபாவை நினைத்து தியானம் செய்தால் போதும். அவர் தம் கருணை பார்வையால் நம்மை ஆட்கொள்வார் என்பதில் ஐயம் இல்லை.கருணை கடவுளான சீரடி வாசனை துதித்து மகிழ்வோம், அவர் அருளாசியோடு இன்புற்று வாழ்வோம்.

இது போன்ற மேலும் பல சாய் பாபா பாடல்கள், சாய் பாபா மந்திரங்கள், கதைகள், அற்புதங்கள் என சாய் பாபா குறித்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -