சாய் பாபா சிலை பால் குடிக்கும் அதிசயம் – வீடியோ

Sai baba

“மகான்களும் ஞானிகளும்” இறைவனின் தூதுவராக மக்களை ஆன்மிகத்தில் வழிநடத்த இப்பூமியில் அவதரிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியான “தெய்வீக மனிதர்கள்” இவ்வுலக வாழ்வை உடுத்து முக்தியடைந்த பின் பல ஆண்டுகளாயினும், தன் மீது உண்மையாக பக்தி கொண்டவர்களுக்காக பல அதிசயங்களை அவர்களுக்காக நிகழ்த்துகின்றனர். “ஷீரடி நாதனாகிய” “ஸ்ரீ சாய் பாபாவும்” அப்படியான தெய்வீக மனிதர்களில் ஒருவர். அவரின் ஒரு அற்புதத்தைப் பற்றிய இக்காணொளியைக் காண்போம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இக்காணொளி “ஸ்ரீ சாய் பாபாவின்” பக்தர் ஒருவரால் அவரது கைப்பேசி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட “சாய் பாபாவின் விக்கிரகம்” இருப்பதைக் காண முடிகிறது. அவ்விக்கிரகத்திற்கு பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து சூடானப் பாலைக் ஒரு கரண்டியில் கொண்டு பாபாவின் சிலையின் வாயில் ஊட்டப்படுவதையும், அப்பாலை பாபாவின் சிலைக் குடிப்பதையும் கண்டு பாபாவின் மகிமையை எண்ணி அவரது பக்தர்கள் உருகுகின்றனர்.

இது போன்ற “சிலைகள் திரவம் அருந்துவது, சிலைகள் கண்ணீர் வடிப்பது” போன்ற நிகழ்வுகள் மற்ற மதங்களிலும் நடந்திருக்கின்றன. அதை மட்டும் “தெய்வீகச் செயல்” என்று ஏற்றுக்கொண்டு, நம் நாட்டு பாரம்பரிய மதங்களில் அபூர்வமாக ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளை நம்மவர்களே ஏளனம் செய்து உண்மையான பக்தர்களின் மனதை நோகச்செய்யாமலிருப்பது நலம்.