சாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு

Sai baba

ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களின் துன்பங்களை துடைக்க இறைவனே பல வித அவதாரங்கள் எடுத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதர்மங்கள் எல்லை மீறி செல்லும் கலியுகத்தில் “சித்தர்களும், மகான்களும்” மட்டுமே மனிதர்களுக்கு உதவும் இறைவனின் அம்சமாக இருக்கின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வாழ்ந்து அனைத்து உயிர்களுக்கும் நன்மைகள் செய்து மறைந்த நம் பாரத பூமியில் பூமியில் கோடிக்கணக்கான பக்தர்களை தன்னனிடம் அன்பு கொள்ள செய்த “ஷீர்டி சாய் பாபா” அண்மை நூற்றாண்டில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவராவார். அவர் மகாசமாதியடைந்த “100”ஆவது நினைவு தினம் சமீபத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. சாய் பாபாவின் சிறப்பு குறித்தும், இந்த நவராத்திரி காலத்தில் அவரை வழிபடுவதற்கான காரணங்களையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Sai baba

ஷீர்டியில் பல ஆண்டுகள் தங்கியிருந்து பாலை நிலம் போன்று இருந்த அந்த பூமியை தனது தவசக்தியால் சோலைவனம் ஆக்கியதுடன், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் இறுதி வரை தனது நல்லாசிகளை வழங்கினார். அவரது தெய்வீக ஆற்றலும், ஞானமும் பாரதம் முழுவதும் இருந்த மக்களை ஷீர்டி எனும் சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வரவழைத்தது. தனக்கருகில் இருக்கும் பக்தர்களுக்கு நேரிலும், எட்டமுடியாத தொலைவில் இருக்கும் தனது பக்தர்களுக்கு தனது சித்தாற்றலால் பல நன்மைகளை செய்துள்ளார் சாய் பாபா.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகாலம் ஷீர்டியில் வாழ்ந்த ஸ்ரீ சாய் பாபா “1918” ஆம் ஆண்டு “அக்டோபர்” மாதம் 15 ஆம் தேதி தனது மானிட தேகத்தை விடுத்து பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தார். இந்த 2018 ஆம் ஆண்டுடன் ஷீர்டி சாய் பாபா மகாசமாதியடைந்து ஒரு “நூற்றாண்டு” ஆகிறது. “விஜயதசமி” தினத்தில் தான் சாய் பாபா மகாசமாதியடைந்தார். நாளை சரஸ்வதி பூஜை தினம் மற்றும் சாய் பாபா வழிபாட்டிற்குரிய வியாழக்கிழமை தினத்தன்று மாலை நமது இல்லம் முழுவதும் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சாய் பாபாவை அவருக்குரிய மந்திரங்களை கூறி மனதில் தியானிக்க வேண்டும்.

Sai baba

உங்களின் பக்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டிற்குள் சாய் பாபா வருகை புரிவார். சாய் பாபாவிற்கு எப்போதும் எதிலும் உண்மை, இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை, கடலளவு பொறுமை, அன்னதானம் மற்றும் பிற உதவிகள் ஆகியவை தான் பக்தர்கள் தரும் மிகவும் பிடித்த காணிக்கை ஆகும். சாய் பாபாவிடம் எதையும் விரும்பி, கோரிக்கை வைக்காமல் உங்களின் முழுமையான பக்தியை அவருக்கு தாருங்கள். உங்களுக்கு எப்போது, எது நன்மை தருமோ அதை, அதற்குரிய காலத்தில் நிச்சயமாக செய்வார் சாய் பாபா.

இதையும் படிக்கலாமே:
குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sai baba pooja in Tamil.