சர்க்கரை வியாதி ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்

sukiran

கோடான கோடி பணம் சம்பாதித்து சாப்பிடும் உணவை செரிமானம் செய்யவும், தூங்குவதற்கும் மருந்தை உட்கொள்ளும் செல்வந்த ஏழையை விட, பணத்தை அதிகம் ஈட்டவில்லையென்றாலும் 100 வயது வரை வாழும் போதும் நோய் நொடிகள் இன்றி, அனைத்திற்கும் பிறரின் உதவிகளை நாடாமல் உடலாரோக்கியதோடு வாழ்பவனே சிறந்த “செல்வந்தன்” என்பது பலரின் கருத்தாகும். இன்று இந்தியர்களை அதிகளவில் தாக்கும் நோயாக “சர்க்கரை வியாதி” அல்லது “நீரிழிவு நோய்” உருவெடுத்திருக்கிறது. சர்க்கரை வியாதி நமக்கு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஆன்மீக ரீதியான வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sugar test

சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் என்பது உடலின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நோயாகும். பரம்பரை ரீதியாகவும், சரியான உணவு பழக்கத்தை பின்பற்றாத காரணத்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒரு நபரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 6 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது அந்த 6 ஆம் வீடு சுக்கிரனுக்கு சொந்த வீடு, ஆட்சி வீடாக இருந்தாலும் அந்நபருக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. ஏற்கனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள், சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பரிகார முறைகளை இங்கு காணலாம்.

ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 27 மொச்சை பயறு எடுத்து கொண்டு, அதை ஒரு வெள்ளை துணியில் முடிந்து, நோய் பாதிப்பு கொண்டவர்கள் உறங்க பயன்படுத்தும் தலையணைக்குள் வைத்து தைத்து விட வேண்டும். அந்த தலையணையை 90 நாட்களுக்கு சர்க்கரை வியாதி கொண்டவர்கள் தலைக்கு வைத்து உறங்க வேண்டும். 91 ஆம் நாள் காலையில் நோய் பாதிப்பு கொண்டவர்களை கிழக்கு திசை பார்த்தவாறு அமரச்செய்து, அந்த தலையணையை கொண்டு திருஷ்டி சுற்றி, ஓடும் நதி நீரில் அல்லது கண்மாயில் போட்டு விட வேண்டும். இந்த பரிகார முறையால் சர்க்கரை நோயாளிகளுக்கு நோயின் தீவிர தன்மை குறையும். உடல் நலம் மேம்படும்.

sukran

ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்திற்கு 6 ஆம் இடத்தில் அமைய பெற்றவர்கள் மற்றும் அந்த 6 ஆம் வீடு சுக்கிரனின் சொந்த வீடு, ஆட்சி வீடாக இருக்க பெற்றவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வணங்கிய பின்பு ஒருவேளை மட்டும் பால் மற்றும் பழம் உணவாக உட்கொள்ளும் விரத முறையை கடைபிடித்து வந்தால் சர்க்கரை நோய் ஏற்படாமல் அருள்புரிவார் சுக்கிர பகவான்.

- Advertisement -

“ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்”

என்ற மேலே உள்ள சுக்கிர மந்திரத்தை தினமும் 16 முறை துதித்து வணங்குபவர்களுக்கு சுக்கிரனின் நல்லருள் கிடைத்து சர்க்கரை வியாதி ஏற்படாமல் காக்கும். சர்க்கரை வியாதி உருவாகாமல் இருக்க நினைப்பவர்கள் அனைவரும் இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாதத்தில் புது தொழில், வியாபாரம் ஏன் தொடங்கப்படுவதில்லை தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தேய்ந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sakkarai viyathi theera pariharam in Tamil.