கோடி யாகம் செய்த புண்ணியம் வேண்டுமா? அதற்கான வழிமுறைகள் இதோ.

salagrama-tmb
- Advertisement -

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் காணப்படும் புனிதமான ஒரு கருநிற கல் தான் “சாளக்கிராமம்”. புனிதமான நதிக்கரையில் கிடைப்பதால் இதற்கு தோஷம் எதுவும் இல்லை. அதே சமயம் இதை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.  இந்த கல்லில் உள்ள மகிமையை பற்றி கூற இந்த ஒரு பதிவு போதாது.

“சாளக்கிராமத்தின் மகிமையை பத்மபுராணம் விரிவாக எடுத்துகூறிகிறது. அதில் கூறப்பட்டுள்ள சிலவற்றை காண்போம்.

1) தினமும் சாளக்கிராமத்தினைப் பூஜிப்பவருக்கு மீண்டும் ஜனனம் இல்லை.
2) இந்த அற்புத கல் நூறு ஜன்ம பாபங்களை நீக்கவல்லது.
3) சாளக்கிராமத்தினை பூஜை செய்து அதன் தீர்த்தத்தினை பிரசாதமாக பருகுபவன், ஆயிரக்கணக்கான பாபங்களைச் செய்தாலும், அவையனைத்தும் நீங்கப்பெற்று புனிதம் பெறுவான். இது பிரம்மஹத்தி பாபத்தினைக் கூட போக்கவல்லது.

- Advertisement -

4)சாளக்கிராம பூஜையினைக் கிரமமாக பண்ணுபவனது வீட்டிற்கு சமீபம் நூறு யோஜனை தூரத்திற்கு அனைத்து புண்ய தீர்த்தங்கள் சூக்குமமாக நிலைபெறும்.
5)சாளக்கிராம ஸந்நிதியில் ஸ்நானமும், அங்கு செய்யும் தானமும் காசியினைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகப்பலனைத் தரும். சாளக்கிராமம் நிறைந்துள்ள கிரஹம் காசியினைக் காட்டிலும் உயர்ந்தது.
6)சாளக்கிராமத்தினைத் தரிசனம் செய்தாலும், பூஜை செய்தாலும், தீர்த்தம் எடுத்துக் கொண்டாலும், கோடி யாகம் செய்த பு்ண்ணியமாம்..! கோடி கோதானம் செய்த புண்ணியமாம்..! அவனுக்குக் கர்ப்பவாஸம் மீண்டும் கிடையாது என்பது திண்ணம்..!

- Advertisement -