சாலியா விதை பாயாசம் செய்முறை

saliya seed payasam
- Advertisement -

ஆரோக்கியமான உணவுகளை நம்முடைய அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும். அதிலும் குறிப்பாக மருத்துவ குணம் மிகுந்த விதைகளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதற்குரிய முழுமையான பலனையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சாலியா விதியை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு பாயசத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சாலியா விதையை ஹலீம் விதை என்றும் கூறுவோம். இந்த விதையில் விட்டமின் ஏ, சி, இ, ஃபோலேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கிறது. இந்த விதை பெண்களுக்கு சிறப்பான ஒன்றாக திகழ்கிறது. மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை, தோல் அரிப்பு போன்ற அனைத்தும் சரியாகும். அதோடு மன அழுத்தமும் குறைய ஆரம்பிக்கும். அஜீரணம், மாதவிடாய் சுழற்சி, இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, தாய்ப்பால் சுரப்பது, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நெய் – 2 ஸ்பூன்
  • கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • பால் – 1/2 லிட்டர்
  • சாலியா விதை – 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – 10
  • பாதாம் – 10
  • ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
  • ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை
  • பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் சாலியா விதையை மூன்று மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நெய் ஊற்ற வேண்டும். நெய் உருக ஆரம்பித்ததும் அதில் கடலை மாவை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூளை சேர்த்து மஞ்சள் தூள் வாடையும் நீங்கும் அளவு வதக்க வேண்டும். பிறகு இதில் பாதி அளவு மட்டும் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்த பிறகு மீதம் இருக்கும் பாலையும் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரையோ அல்லது இடிக்கல்லையோ எடுத்து மிளகு சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அதனுடன் பாதாமையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு பாதாமை சேர்த்துக் கொள்ள வேண்டும். அது நன்றாக கொதித்த பிறகு ஊற வைத்திருக்கும் சாலியா விதையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இது நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் போன்றவற்றின் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடம் நன்றாக குதித்த பிறகு பனங்கற்கண்டை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கிவிட வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை என்ற வீதம் இந்த பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் பொழுது மூட்டு வலி, சளி, இருமல், தூக்கமின்மை, முதுகு வலி, சோர்வு, உடல் பலவீனம் போன்ற அனைத்தும் சரியாகும்.

இதையும் படிக்கலாமே கோதுமை ரவை பிரியாணி செய்முறை

பல மருத்துவ குணம் மிகுந்த இந்த சாலியா விதையை இந்த முறையில் நாம் இனிப்பு பாயாசமாக செய்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -