இந்த 1 பொருள் கலந்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? அதிர்ஷ்டம் பெருக நாம் வீட்டில் செய்யக்கூடாத தவறு என்ன?

thirusti-lemon-sembaruthi
- Advertisement -

அதிர்ஷ்டம் என்பது இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தான். அது எப்போது? யாருக்கு கிடைக்கும்? என்பதெல்லாம் நாம் செய்த கர்ம வினையின் அடிப்படையில் தான் நடக்கும். பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டமும் பெருகும், துரதிருஷ்டமும் குடிகொள்ளும். நாம் நல்லதே செய்து இருந்தாலும் சில தீய சக்திகள் மூலம் நமக்கு கெடுதல் உண்டாகும். நல்லது கெட்டது என்று எப்படி இருக்கிறதோ! அதே போல தான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் இருவேறு பாகங்கள் இருக்கின்றன.

theertham1

அவ்வகையில் நாம் நம்முடைய வீட்டில் செய்யும் சில தவறுகளால் வர இருக்கின்ற அதிர்ஷ்டத்தை தடுத்து நிறுத்தி விடுகின்றோம். அப்படி நாம் செய்யும் தவறுகள் என்ன? இதிலிருந்து விடுபட நாம் எது கலந்த தண்ணீரை வீட்டில் என்ன செய்ய வேண்டும்? தண்ணீரில் நாம் எதை தான் அப்படி சேர்க்க வேண்டும்? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக தான் இந்த பதிவில் தொடர்ந்து வர இருக்கிறது. இதனை தெரிந்து கொள்ள மேலும் இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

பொதுவாகவே நம்முடைய அதிர்ஷ்டங்களை வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தடுத்துக் கொண்டிருக்கும். இதற்காக தான் திருஷ்டி என்கிற பெயரில் அந்த ஆற்றல்களை நீக்க வீட்டில் விசேஷ நாட்களில் திருஷ்டி கழிப்பது செய்து வருகிறோம். அது போல வீட்டின் மேல் இருக்கும் திருஷ்டிகள் நீங்க தலை வாசலில் எலுமிச்சம்பழம் கட்டுவது, படிகாரம் கட்டுவது, கண் திருஷ்டி கணபதி படத்தை மாட்டுவது போன்ற விஷயங்களை செய்து வருகிறோம்.

அது போல திருஷ்டிக்காக கற்றாழை, செம்பருத்தி, மருதாணி போன்ற செடிகளை வீட்டிற்கு முன்னால் வளர்த்து வருகிறோம். சில பேரது வீடுகளில் வாசலில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். இவைகளெல்லாம் எதிர்மறை ஆற்றல்களை தன்னுள் கிரகித்து கொள்ளும் தன்மையுடையது.

- Advertisement -

இப்படி நாம் செய்யும் சில விஷயங்களில் நாட்கள் செல்ல செல்ல அதிகப்படியான எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்து விடும். பின்னர் அவற்றை நீக்காமல் அப்படியே நாம் வைத்திருந்தால், அதுவே நமக்கு ஆபத்தாக முடியும். திருஷ்டிக்காக நீங்கள் கட்டும் சில விஷயங்கள் கெட்டுப் போனால் உடனே அவற்றை நீக்கிவிட்டு புதிதாக கட்டி விட வேண்டும். இப்படி நாம் அதை தொட்டு எடுக்கும் பொழுது கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

thirusti-lemon

பொதுவாக திருஷ்டிகள் பாதம் வழியாக செல்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் திருஷ்டிகள் கழிக்கும் பொழுது கால், கைகளை கழுவி விட்டு உள்ளே வர வேண்டும் என்று கூறுகிறார்கள். குறிப்பாக பின்னங்காலில் மூதேவி குடியிருப்பதாக ஐதீகம் உள்ளது. பின்னங்காலை கழுவாமல் எப்பொழுதும் வீட்டிற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

leg

இது போல திருஷ்டிக்காக நாம் செய்யும் சில விஷயங்களை அவ்வபோது நீக்கி விடுவது மிகவும் நல்லது. அப்படி புதுப்பிக்க படாமல் இருந்தால் அதன் மூலம் நம்மிடம் இருக்கும் நல்ல சக்திகளும், நேர்மறை ஆற்றல்களும் நீங்கிவிடும் என்கிற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான் ஆலயங்களில் தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. கெட்ட விஷயங்களை ஈர்த்துக் கொள்ளும் நல்ல விஷயங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டு வருவது அவசியமாகும்.

abishegam

வீட்டில் விநாயகர் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு தினமும் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது சாதாரண தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தாலே போதுமானது. அது போல் திருஷ்டிக்காக வளர்க்கப்படும் செடிகள் மற்றும் சில பொருட்கள் நம்மிடம் இருக்கும் நல்ல ஆற்றல்களை ஈர்த்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள உப்பு கலந்த தண்ணீரை வாரம் ஒரு முறை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.

salt-water-bath

அல்லது கோமாதாவின் கோ ஜலத்தில் அதாவது கோமியத்தில் தர்பை அல்லது அருகம்புல் வைத்து தெளித்து வந்தால் திருஷ்டியை கிரகிக்கும் பொருட்களும், செடி வகைகளும் புதுப்பிக்கப்படும் என்பது ஐதீகம். நம்மிடம் இருக்கும் நல்ல ஆற்றல்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள இது போல வாரம் ஒரு முறை செய்து வருவது அதிர்ஷ்டத்தை நிச்சயம் தேடித்தரும்.

இதையும் படிக்கலாமே
கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? கோவிலில் எந்த இடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, எந்தப் பொருளை நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -