சமையலறையில் பெண்கள் இதை செய்தாலே போதும். சிக்கனமாக செலவு செய்யும் பழக்கமும், சேமிப்பும் பல மடங்கு உயரும்.

women
- Advertisement -

சமையலறை ஒரு வீட்டின் இன்னொரு பூஜை அறை என்று கூட சொல்லலாம். பூஜை அறைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை பெண்கள் சமையல் அறைக்கும் கொடுக்க வேண்டும். பூஜை அறையில் வழிபாடு செய்தால் தான் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகுமா? பூஜை அறையோடு சேர்த்து சமையலறையையும் பக்தியோடு வழி நடத்துபவர்களுடைய வீட்டில் மகாலட்சுமி சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வாள். இது நிதர்சனமான உண்மை. பூஜை அறையில் விழுந்து விழுந்து இறைவழிபாடு செய்துவிட்டு, சமையலறையை குப்பைத் தொட்டி போல வைத்திருப்பவர்கள் வீட்டிலும் வறுமை கஷ்டம்  இருக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

சமையலறையின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு என்பது பெண்களிடத்தில் தான் உள்ளது. சமையலறையில் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலில் சமையலறையில் எந்த பொருட்களும் முழுமையாக தீருவதற்கு முன்பு அதை வாங்கி வைக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடத்தில் உள்ளது. சமையலறையில் இந்த பொருட்கள் ‘இல்லை’ என்ற வார்த்தையை பெண்கள் வாயால் பயன்படுத்தவே கூடாது.

- Advertisement -

இல்லை என்ற வார்த்தை எந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்களின் வாயிலிருந்து வருகிறதோ, அந்த வீட்டில் எல்லாம் இல்லாமலே போய்விடும். குறிப்பாக அரிசி, பருப்பு, உப்பு இவை மூன்றும் முழுவதுமாக தீர்வதற்கு முன்பு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அரிசி வைக்க கூடிய ட்ரம் அல்லது மூட்டை அல்லது வேறு ஏதாவது பாத்திரம் எதுவாக இருந்தாலும் சரி அரிசியுடன் கட்டாயமாக அரிசியை அளந்து போடும் ஆழாக்கு இருக்க வேண்டும். அழாக்கு என்றால் நிறைய பேருக்கு தெரிவது கிடையாது. டம்ளரை தான் அரிசி அளக்க பயன்படுகிறார்கள். பாத்திரம் விற்கும் கடைகளில் ஆழாக்கு என்று அரிசி அளப்பதற்கு ஒரு சாதனம் கிடைக்கும். அதை வாங்கி அரிசிக்குள்ளேயே போட்டு வையுங்கள். அந்த ஆழாக்குக்கு உள்ளேயே எப்போதும் இரண்டு அரிசி இருக்க வேண்டும். ஆழாக்கை கவிழ்த்து வைக்கக்கூடாது.

இதே போல அரிசியை சுத்தம் செய்வதற்கு முறம் இருக்கும். அந்த முறமும் இரண்டு சமையலறையில் கட்டாயமாக இருக்க வேண்டும். (பிளாஸ்டிக் முறம் பயன்படுத்துவதை விட மூங்கிலினால் செய்யப்பட்ட முறத்தை பயன்படுத்துவதே சரி.) நாம் சமைப்பதற்கு பயன்படுத்த போகும் அரிசி பருப்பை ஆழாக்கில் அளந்து இந்த முறத்தில் கொட்டி சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்பு தான் அரிசி பருப்பை சமைக்க பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு வேலைகளை வீட்டில் இருக்கும் பெண்கள் தவறாமல் தினம் தோறும் செய்ய வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று சொல்லுவார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அந்த பொறுப்பு மிக மிக அவசியம் தேவை.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு சரியான அளவில் சமைக்க வேண்டும். சுத்தமாக சமைக்க வேண்டும். இந்த பொறுப்பு பெண்களிடத்தில் வந்து விட்டாலே சிக்கனம் தானாக அவர்களுடைய கையில் வந்துவிடும். அளவில்லாமல் அரிசி பருப்பை போட்டு சமைத்து குப்பையில் கொட்டும் பழக்கம் உள்ள பெண்கள் கையில் காசு பணம் தங்காது. சமைக்கும்போது சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்காத பெண்களுடைய வீட்டில் சுத்தமும் நிச்சயம் இருக்காது. சத்தத்தைப் பற்றி தெரியாத பெண்களுக்கு வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டதை பகுத்தறிந்து ஆராயத் தெரியாது.

சமையலறையில் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வரக்கூடிய பெண்கள் வாழ்க்கையிலும் பக்குவம் அடைவார்கள். இதற்காகத்தான் அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் இப்படிப்பட்ட பழக்க வழக்க முறைகளை நமக்கு சொல்லிக் கொடுத்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் நிறைய நல்ல மாற்றங்களை உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -