சமையலுக்கு பயன்படும் இந்த 1 முக்கிய பொருள் இப்படி இருந்தால்! வீட்டில் செல்வ மழை பொழியும் என்கிறதா சாஸ்திரம்? என்ன பொருள் அது?

peengan-jaadi
- Advertisement -

வீட்டின் சமையலறை மிகவும் முக்கியமானது. அங்கு நாம் சேமித்து வைக்கும் ஒவ்வொரு பொருளும் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை. உண்ணும் உணவு பொருட்களில் அன்னபூரணி வாசம் செய்யும் மகத்துவம் வாய்ந்த இடமாகும். அவளின் பரிபூரண அருளை பெறுபவர்களுக்கு வாழ்வில் என்றுமே வறுமை அண்டுவதில்லை. அந்த வகையில் இந்த ஒரு முக்கிய பொருளை சமையலறையில் இப்படி வைத்தால் செல்வ மழையானது வீட்டில் பொழியும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பொருள் அது? அதை எப்படி வைக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

perumal-marraige

முன்னொரு காலத்தில் எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் பொழுது வரதட்சணையாக பொன் நகை மட்டும் அல்லாமல் அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களையும் சேர்த்து கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தை நினைவுபடுத்தி கூறலாம். திருப்பதி ஏழுமலையான் திருமணத்தின் பொழுது அன்னைக்கு சீதனமாக வந்த பொருட்களில் கறிவேப்பிலை இல்லை என்று ஒரு திருவிளையாடல் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். கறிவேப்பிலையை கூட விட்டுவைக்காமல் எல்லா பொருட்களையும் வரதட்சணையாக கொடுத்து பெண்ணை திருமணம் செய்து வைத்து பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள். அத்தகைய பொருட்களில் ஒன்றாக இருப்பது தான் புளி.

- Advertisement -

சமையலுக்கு பயன்படுத்தும் இந்த புளியை இன்றும் கூட நிறைய பெண்கள் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வரும் பொழுது அங்கிருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவது உண்டு. புளியில் இருக்கும் சக்தி தெய்வீகத் தன்மை உடையது. அறுசுவைகளில் ஒன்றான புளிப்பு தன்மையை கொடுக்கக் கூடிய இந்த புளி நாவின் நரம்புகளை தூண்டி விடக் கூடியது. இதனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், வீட்டில் செல்வம் ஆனது பன்மடங்கு பெருகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

puli-tamarind

அதனால் தான் பழங்காலங்களில் எல்லாம் புளியை பீங்கான் பாத்திரத்தில் அடைத்து வைத்திருப்பார்கள். நாட்டில் வெள்ளம் சூழும் பொழுது அரிசி, பருப்பு, தானிய வகைகளை ஒரு வருடத்திற்கு கூட சேகரித்து வைப்பார்கள். அதே போல இந்த புளியையும் கூட பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம். காய்ந்து உலர வைத்த புளி எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவது இல்லை. அதில் சிறிது ஈரப்பதம் இருந்தாலும் வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் வர ஆரம்பித்துவிடும். எனவே புளியை பயன்படுத்தும் பொழுது ஈரக் கைகளுடன் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

உப்பு, ஊறுகாய் மற்றும் புளி இந்த மூன்று விஷயங்கள் எப்பொழுதும் பீங்கான் பாத்திரத்தில் வைத்தால் வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் என்கிறது சாஸ்திரம். உப்பை எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்தால் பாத்திரம் துருபிடிக்க துவங்கிவிடும். அதே போல் ஊறுகாயும் அப்படி தான். இந்த வகையில் புளியையும் நீங்கள் எந்த ஒரு பாத்திரத்தில் சேகரிப்பதை விடவும், பீங்கான் பாத்திரத்தில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

tamarind-puli

உப்பு, ஊறுகாய், புளி ஆகிய இந்த மூன்று விஷயங்களை பீங்கான் பாத்திரத்தில் வைத்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் செல்வ மழை நிச்சயம் பொழியும். உப்பு, ஊறுகாய், புளி ஆகிய இந்த மூன்று பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொண்டால் குபேர சம்பத்து உண்டாகும். குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் ஊறுகாய். இப்படி சாஸ்திர ரீதியாக இந்த புளியை வைத்து பாருங்கள், நடக்கும் அதிசயத்தை நீங்களே உணரலாம்.

- Advertisement -