- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசம்பளம் வாங்கியவுடன் முதலில் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும். சம்பளப் பணத்திலிருந்து 1 ரூபாய்...

சம்பளம் வாங்கியவுடன் முதலில் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும். சம்பளப் பணத்திலிருந்து 1 ரூபாய் கூட வீண் விரையம் ஆகாது.

- Advertisement -

பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். அதில் கஷ்டம் கிடையாது. ஆனால், சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்பதில்தான் கஷ்டமும் சூட்சமமும் அடங்கியுள்ளது. நாம் சம்பாதித்த பணம் அனைத்தும் வீண் விரயமாகி கொண்டே இருந்தால், நிச்சயமாக நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நாம் சம்பாதிக்கும் தொகை சிறிதளவாக இருந்தாலும், அந்த பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் இருக்க வேண்டும். அதே சமயம் சுபகாரியத்திறக்காவும், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் மட்டுமே அந்த பணம் செலவாக வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

kadan

சரி, நமக்கு வரக்கூடிய வருமானம் வீண்விரயம் ஆகக்கூடாது. சுப காரியத்திற்காக அந்த பணம் செலவாக வேண்டும். அதேபோல் தேவைக்கு ஏற்ப அந்த பணம் நல்லபடியாக செலவாக வேண்டும். சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பில் வைக்க வேண்டும் என்றால், இதற்கு சம்பளம் வாங்கியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

சம்பளம் வாங்கியவுடன் உங்கள் கைக்கு வந்த வருமானத்திலிருந்து ஒரு தொகையைக் கொடுத்து முதலில் துவரம் பருப்பு அல்லது நெய்யை வாங்கிக் கொண்டுவந்து உங்களுடைய வீட்டில் வைத்து விடுங்கள். உங்கள் கைக்கு வந்த வருமானத்திலிருந்து முதல் தொகையை இந்த இரண்டு பொருட்களை வாங்குவதற்காக செலவழிக்க வேண்டும். மாதம் தோறும் இப்படி செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் பணம் வீண் விரயம் ஆவது குறையும்.

thuvaram-paruppu

நிறைய பேர் மாதம் ஒருமுறை மளிகை பொருட்கள் வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். உங்களுக்கு தனித்தனியாக மளிகை பொருட்களை கடைக்கு சென்று வாங்கும் பழக்கம் இல்லை என்றால், மாதம்தோறும் மளிகை பொருட்கள் வாங்கும் லிஸ்ட் எழுதும்போது, அதில் முதலில் துவரம்பருப்பை எழுதவேண்டும். அடுத்தபடியாக நெய் எழுதுங்கள். இப்படி எழுதி மளிகை பொருட்களை வாங்கினாலும் உங்களுடைய வீட்டு தன தானியத்திற்கு எந்தவித பஞ்சமும் ஏற்படாமல் இருக்கும். வீட்டில் செல்வ செழிப்பு நிறைவாக இருக்கும். வீண் விரையம் குறையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -

மகாலட்சுமி அம்சம் பொருந்தியது நெய். நெய் வாங்குவதற்கு நீங்கள் எவ்வளவு பணத்தை செலவழிக்கிறீர்களோ, அந்த பணம் இரட்டிப்பாக மீண்டும் உங்கள் கைக்கு வந்து விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இது நிறைய பேருக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த துவரம்பருப்பிற்க்கு எதற்காக இவ்வளவு சிறப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.

ghee

அன்னத்திற்கு சொந்தமான அன்னபூரணி தாயாருக்கு விருப்பமான பொருள் என்றால் அந்தப் பட்டியலில் இந்த துவரம்பருப்பு முதல் இடம் உண்டு. நம்முடைய வாழ்க்கையில் தனத்திற்கு எந்த அளவிற்கு நாம் முக்கியத்துவத்தை கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு தானியத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். தனமும் தானியமும் ஒரு வீட்டில் சேர்ந்து நிறைவாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வ செழிப்பு நிறைவாக இருக்கும்.

money1

எப்போதெல்லாம் உங்களால் முடியுமோ அப்போதெல்லாம் உங்களால் முடிந்த துவரம் பருப்பையும், நெய்யையும் வாங்கி இயலாதவர்களுக்கு தானமாக கொடுங்கள். அவர்கள் அந்த இரண்டு பொருட்களையும் வாங்கி தங்களுடைய வீட்டிற்கு கொண்டு போய் மனநிறைவோடு சமைத்து சாப்பிட்டாலே போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை கடன் பிரச்சனை வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்திற்கும் சுலபமான ஒரு தீர்வு கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்