சுமாரா சமைக்கிறவங்க சாம்பார் வைத்தாலும், அந்த சாம்பார் வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். இந்த சாம்பார் பொடியை 1 ஸ்பூன் போட்டால்?

sambar-podi1

நம்முடைய வீட்டில் அடிக்கடி வைக்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்த, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, சாம்பாரை சிலருக்கு சுவையாகவே வைக்க தெரியாது. சுமாராக சமைப்பவர்கள் வைக்கும் சாம்பார் கூட, சூப்பரா வரும். இந்த சாம்பார் பொடிய ஒரு ஸ்பூன் போட்டு சாம்பார் வெச்சா! இந்த பொடிக்கு தேவையான பொருட்களை வாங்கி உங்கள் கைகளாலேயே வறுத்து உங்கள் வீட்டு மிக்ஸியில் அரைத்து ஒரு வாட்டி சாம்பார் வைத்து பாருங்கள். அதனுடைய வாசம்  சூப்பராக வரும். சுவையும் அருமையாக இருக்கும். இந்த  சாம்பார் பொடியை அரைக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸூம் இந்த பதிவில்!

sambar-podi1

சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 50 கிராம், உளுந்து – 50 கிராம், சீரகம் – 50 கிராம், மிளகு – 50 கிராம், கடுகு – 10 கிராம், வெந்தயம் – 10 கிராம், கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி – 50 கிராம், பெருங்காயம் – 1 ஸ்பூன், வரமல்லி – 100 கிராம், வரமிளகாய் – 75 கிராம், உப்பு – 1 ஸ்பூன், விரலி மஞ்சள் – 2, அல்லது மஞ்சள் தூள் – 2 ஸ்பூன். (மிக்ஸியில் அரைப்பவர்கள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளலாம் கடையில் கொடுத்து அரைப்பவர்கள் விரலி மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.)

வரமிளகாயை காம்போடு 75 கிராம் வாங்கி கொண்டு, அதன் பின்பு அதில் இருக்கும் காம்புகளை நீக்கி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் சேர்க்கப்படும் அரிசியை வாணலியை நன்றாக சூடு செய்துவிட்டு, பொரி அரிசி போல் வறுத்துக்கொண்டு சாம்பார் பொடியில் சேர்க்க வேண்டும்.

fry

சாம்பார் பொடியை வறுப்பதற்கு ஒரு சீக்ரெட் டிப்ஸ் இருக்கிறது என்று சொன்னோம் அல்லவா? அது என்ன தெரியுமா? இந்த பொருட்களையெல்லாம் 2 ஸ்பூன் நெய் விட்டு வறுக்க போகின்றோம்.

- Advertisement -

Step 1:
முதலில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒவ்வொரு பொருளாக போட்டு வருக்க வேண்டும். முதலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கடலைப்பருப்பு, போட்டு சிவக்கும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக உளுந்து, சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சரிசி, இந்த வரிசையில் போடுங்கள். கடாயில் இருக்கும் ஒரு ஸ்பூன் நெய் வாசம் மட்டுமே போதும். இப்படியாக பெருங்காயம் வரை ஒரு ஸ்பூன் நெய்யிலேயே வறுத்து எடுத்து விடுங்கள்.

Step 2:
அடுத்தபடியாக, வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, வர மல்லியை போட்டு சிவக்கும் அளவிற்கு வறுத்துவிட வேண்டும். அதன் பின்பு அதே கடாயில் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு, அதன் பின்பு வரமிளகாய் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது மிளகாய் காரம் அடிக்காது. இந்த பொருட்களெல்லாம் அப்படியே நன்றாக ஆரட்டும்.

sambar-podi

எல்லா பொருட்களையும் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சரியான பதத்தில் வறுத்து எடுத்தால் தான் சாம்பார் சுவையாக இருக்கும். கருகி விட்டால் சாம்பாரின் சுவை மாறி விடும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா பொருட்களையும் ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு, இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளையும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

sambar2

Step 3:
ரொம்ப ரொம்ப நைஸாக அரைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 90 சதவிகிதம் இந்த தூள் அறிந்தாலே போதும். இந்தப் பொடியை கொஞ்ச நேரம் ஆற வைத்து விட்டு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு ஸ்பூன் போட்டு சாம்பார் வச்சு பாருங்க! நீங்க வைக்கும் சாம்பார் சூப்பரா வரும். ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! புடிச்சிருந்தா உங்க கையாலேயே அடிக்கடி பிரஷ்ஷான சாம்பார்பொடி அரைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.