நாக்கில் ஒரு கிலோ கற்பூரத்தை எரிய விடும் சாமியார் – வீடியோ

samiyar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
தமிழகத்தில் உள்ள சாமியார்கள் பலர் இறைவனின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. அந்த வகையில் ரவிசங்கர் என்னும் சாமியார் அம்மன் அருளால் தன்னுடைய நாக்கில் கிலோ கணக்கில் கற்பூரங்களை எரியவிடுகிறார். அதோடு தனது கைகளில் பல மணி நேரம் தீ சட்டியை ஏந்தி ஆடுகிறார். இதோ அந்த பரபரப்பான காட்சி.

சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ரவிசங்கர். இவர் அமாவாசை தோறும் ஒரு கிலோ கற்ப்பூரத்தை தன் வாயில் ஏற்றிக்கொண்டு நடனம் ஆடுகிறார். இதற்கு காரணம் இவர் உடம்பில் அம்மன் இறங்குவது தான் என்று கூறுகிறார் அவர். இவர் உடம்பில் அம்மன் இறங்கியதும் இவரின் நடை உடை பாவனை அனைத்தும் பெண்களை போல மாறுகிறது. தலையில் பூ சூடிக்கொள்கிறார். அதோடு இவர் பெண் குரலிலும் பேச துவங்கி விடுகிறார்.

இவர் கற்ப்பூரத்தை வாயில் ஏற்றுவதோடு தன் கைகளில் பல மணி நேரம் தொடர்ந்து கொதிக்கும் தீ சட்டியை ஏந்தியபடி உள்ளார். சாதாரண மனிதர்களால் தொட கூட முடியாத அளவிற்கு அந்த தீ சட்டியில் நெருப்பு கனல் வீசுகிறது. இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே தன் உடம்பில் அம்மன் இறங்க துவங்கியதாக இவர் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல், கிலோ கணக்கில் இப்படி கற்பூரத்தை நாவில் ஏற்றினால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது என்று இவரிடம் பலர் கூறியுள்ளனர். ஆனாலும் இவர் அதை நான் செய்யவில்லை அம்மன் தான் செய்கிறாள். ஆகையால் எனக்கு எந்த தீங்கும் நேராது என்று உறுதியோடு இருக்கிறார்.