நல்ல நாள், கிழமையுமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் தடுக்க பூஜையில் பிள்ளையாருக்கு இதை கட்டாயம் செய்யுங்கள்!

fight-vinayagar

‘நாளும் கோளும் செய்யாதது! நமக்கு எதுவும் செய்து விடாது’ என்பது ஜோதிட பழமொழி. அதற்கேற்ப இந்து சமுதாயத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்களையும் நாள், கோள் பார்க்காமல் செய்வதில்லை. நாளும், கோளும் நமக்கு நல்லதை செய்ய பூஜைகள் மேற்கொள்வது அவசியமாகும். அதற்காக தான் வீட்டில் விளக்கேற்றி, இறைவனுக்கு வழிபாடுகள் செய்கின்றோம். அப்படி இருக்க நல்ல நாள் அதுவுமாக குடும்பத்தில் பிரச்சனைகள், சண்டைகள் வந்தால் மிகுந்த மன பயம் உண்டாகும். இவற்றை நீக்குவதற்கு பூஜையில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

fight4

நன்றாக இருந்த குடும்பத்தில் திடீரென சண்டைகளும், சச்சரவுகளும் அதிகமாகும் பொழுது நமக்கு என்னடா இது? இப்படி எல்லாம் நடக்கிறது! என்கிற மன பயம் வந்துவிடும். அதிலும் குறிப்பாக நல்ல நாள் அன்று இதுபோல் ஏற்படும் பொழுது பயமாகத்தான் இருக்கும். நிறைய பேருடைய வீட்டில் இப்படி நடப்பது உண்டு. வாரம் முழுவதும் நன்றாக இருந்தாலும், பூஜை செய்யும் வெள்ளிக்கிழமை அன்று திடீரென சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பூஜையில் மன நிறைவு என்பதே இல்லாமல் போய்விடும். இப்படியான சமயங்களில் என்ன செய்யலாம்?

வீட்டில் பூஜைகள் செய்யும் போது மனநிறைவுடனும், முழு திருப்தியுடனும் செய்ய வேண்டும். இப்படியான சண்டை, சச்சரவுகள் ஏற்படும் பொழுது வீட்டில் நல்ல சக்திகளின் ஆதிக்கம் குறைவாக இருப்பதையும் அது உணர்த்துகிறது. விசேஷம், பூஜை, விழா என்று வரும் பொழுது வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும். பூஜைக்கு தயார் செய்யும் பொழுது பிள்ளையார் பிடித்து வைப்பது என்பது நல்ல விஷயங்களை உண்டாக்கும்.

manjal-pillaiyar2

முழுமுதற்கடவுளான விநாயகரை பல்வேறு பொருட்களைக் கொண்டு பிள்ளையார் பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு பொருட்களிலும் பிள்ளையார் பிடிக்கும் பொழுது ஒவ்வொரு பலன்கள் உண்டு. அது போல வீட்டில் நல்ல நாள், கிழமை என்று வரும் பொழுது நடக்கும் சண்டைகள் தீர்வதற்கு வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த பொருளை கொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பது நல்ல ஒரு பலனாக அமைய இருக்கிறது.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பது வெற்றியை உண்டாக்கும். எந்த ஒரு பூஜையிலும் மஞ்சள் கொண்டு செய்யப்பட்ட பிள்ளையாரை பிடித்து வைத்தால் செய்யும் பூஜையானது முழு திருப்தியுடன், மன நிறைவடையும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வகையில் மஞ்சள் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வீட்டில் இருக்கும் சண்டை, சச்சரவுகளை குறைத்துவிடும். கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் தீர அன்னம் கொண்டு பிள்ளையாரை பிடிக்கலாம் அதாவது சாதம் சிறிதளவு எடுத்து அதில் பிள்ளையார் போல் பிடித்து வைக்கலாம்.

vinayagar

அன்ன பிள்ளையார் என்பது அன்ன தோஷத்தை மட்டுமல்ல! இது போல் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகள், மன குறைகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பூஜைகள் செய்யும் பொழுது அன்னத்தால் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு பூஜை செய்ய ஆரம்பியுங்கள். அதுபோல எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி காண பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். வீட்டில் அடிக்கடி இந்த சண்டைகள் நடக்கும் பொழுது பூஜை செய்யும் நாளன்று தேங்காய் உடைத்து வழிபட்டு பாருங்கள் அடுத்த முறை பிரச்சனையே வராது.