அதிசயத்தை பாருங்கள்! இந்த வளையல்களை கையில் போட்டுக் கொண்ட பெண், லட்சுமி அம்சமாகவே மாறிவிடுவாள். பின்பு, அந்தப் பெண் எதைத் தொட்டாலும் அது பொன்னாகும்.

bangles

பெண்கள் என்பவர்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள் தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை மேலும் வலுப்படுத்த, பெண்கள் தங்களுடைய இருக்கைகளில் இந்த வளையலை போட்டுக் கொண்டாலே போதும். கண்ணாடி வளையல்கள், தங்க வளையல்கள், பஞ்சலோக வளையல்கள், பித்தளை வளையல்கள் என்று பலவகையான உலோகங்களில் செய்யப்பட்ட வளையல் இருக்கத்தான் செய்கின்றது. இவைகளையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் ஃபைபர் மெட்டல் என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bangles1

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை மகாலட்சுமி தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.

வடமாநிலத்தவர்கள் இந்த சங்கு வளையல்களை தங்களுடைய பெண்களுக்கு சீதனமாக கொடுப்பார்களாம். பெண், புகுந்த வீட்டில் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக! சங்கு வளைகளை எந்தப் பெண் தன்னுடைய கையில் அணிந்து கொண்டு இருக்கின்றாளோ, அந்த பெண்ணின் கைகள் அதிர்ஷ்டமான கைகளாக மாறி விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

bangles2

அதாவது சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். இதுதான் அதற்கு அர்த்தம். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழவேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்.

- Advertisement -

சங்கு வளையலை கையில் அணிந்து கொண்டு அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அந்த வியாபாரம் ஓஹோவென பெருகும். குறிப்பாக அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களுக்கு சங்கு வளைகளை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தை பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.

bangles3

வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளைகளை கொண்டுபோய் வைத்து பாருங்கள். அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறையில் அரிசி பானையின் இந்த சங்கு வளைகளை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது. இந்த சங்கு வெறும் மகாலட்சுமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விஷ்ணு பகவான், சிவன், குபேரர், இவர்களுக்கும் இந்த சங்கில் பங்கு உண்டு.

vishnu-lakshmi

ஆக மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தோடு விஷ்ணு பகவான் சிவன் பகவானின் ஆசீர்வாதத்தை பெற்று தரவும் இந்த சங்கு வளையல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சங்கு வளையல்களை அணிந்து கொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனை தரும்.

mahalashmi3

ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள அத்தனை நன்மைகளையும் பெற வேண்டும் என்றால், அசல் சங்கு வளையலை கொஞ்சம் செலவு செய்து வாங்க வேண்டியதாக இருக்கும். விற்பனையில் போலியான சங்கு வளையல்கள் நிறைய விற்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று. தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து நல்ல சங்கு வளையல்கள் ஆக உங்களுக்கு கிடைத்தால் வாங்கி வீட்டில் இருக்கும் பெண்கள் அணிந்துகொள்ளலாம். உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள், உங்களுடைய சொந்தக்காரர்களுக்கு வாங்கி பரிசுப் பொருளாகவும் கொடுக்கலாம். நிச்சயம் நல்ல பலனை பெறலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.