- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனிபகவானின் ஆக்ரோஷம் குறைய எளிய பரிகாரம்

சனிபகவானின் ஆக்ரோஷம் குறைய எளிய பரிகாரம்

- Advertisement -

ஒரு சில கிழமைகளில், ஒரு சில நட்சத்திரங்கள் சேர்ந்து வரும்போது நாம் செய்யக்கூடிய வழிபாடானது நம்முடைய கஷ்டங்களை அதிவிரைவாக சரி செய்து விடும். அந்த வகையில் பார்த்தால் இந்த வியாழக்கிழமையோடு சேர்ந்து உத்திரட்டாதி நட்சத்திரம் வந்திருக்கிறது. இன்றைய நாளில் சனி பகவானை வழிபாடு செய்தால், நம் ஜாதக கட்டத்தில் இருக்கும் சனி தோஷங்கள் விலகும்.

ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஸ்தமத்து சனி என்று எந்த சனி தோஷம் உங்கள் ஜாதக கட்டத்தில் இருந்தாலும், சனிபகவானால் உங்களுடைய வாழ்க்கையில் பல கெடுதல்கள் நடக்கும் பட்சத்தில், இன்றைய தினம் சனிபகவானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக சனி தோஷம் குறையும். சனியின் ஆக்ரோஷம் குறையும். உங்களுடைய துன்பங்களின் வீரியங்களும் குறைய துவங்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் எங்கு இருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை முதலில் வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோவிலா, அம்மன் கோவிலா, பிள்ளையார் கோவிலா, எந்த கோவிலாக இருந்தாலும் அந்த தெய்வத்திடம் முதலில் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, பிறகு நவகிரகத்திடம் செல்லுங்கள்.

சனி பகவானுக்கு 2 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நீல நிற சங்குப்பூ வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இன்றைய பொழுது இந்த வழிபாட்டை எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். இன்று இரவு 7:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்தால் அதி அற்புதமான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கூடுமானவரை இன்று யாரும் முடிவெட்டிக் கொள்ளாதீர்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. நகம் வெட்டக்கூடாது. ஷேவிங் செய்யக்கூடாது. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக இந்த விஷயங்களை எல்லாம் இன்று நான் செய்து விட்டேன் என்றால் தவறு கிடையாது. பிரபஞ்சத்திடம் நான் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு ஒன்றையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

இன்று சுப விஷயங்களை செய்யலாம், வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரணங்கள் பொன் பொருள் வாங்கினால் அது லாபகரமாக இருக்கும். வாங்கிய பொருட்கள் எந்த விதத்திலும் நஷ்டமடையாது. தங்கம் வெள்ளி வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும். வாங்கிய நகைகள் அடமானத்திற்கு போகாமலும் இருக்கும்.

- Advertisement -

அதேபோல இன்று மதியம் சாப்பிடுவதற்கு முன்பு, காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த சாதத்தை வைத்து விட்டு, பிறகு உங்களுடைய மதிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நல்லதே நடக்கும். முடிந்தால் இன்றைய தினம் உங்கள் கையால் ஊனமுற்றவர்களுக்கு ஒரு சிறு உதவியை செய்யுங்கள். இன்று மதிய உணவிற்காக ஒரு தயிர் சாதம் வாங்கி ஒரு ஊனமுற்றவர்களுக்கு தானமாக கொடுத்தாலும் போதும்.

மேலே சொன்ன இந்த வழிபாடுகளை எல்லாம் எங்களால் செய்யவே முடியாது. இதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது. இரவு வீடு திரும்பவதற்கே, இரவு 9 மணி ஆகிவிடும் என்று நினைப்பவர்கள், இருந்த இடத்திலிருந்து சனிபகவானின் மனதார நினைத்து அறியாமல் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிடுங்கள். சனி பகவான் ஆசியை பரிபூரணமாக பெற்றுவிடலாம்.

சனிபகவான் மந்திரம்

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ

இதையும் படிக்கலாமே: பணம் தங்க பச்சரிசி பரிகாரம்

இந்த மந்திரமானது உங்களுடைய கஷ்டங்களை போக்குவதற்கு உதவியாக இருக்கும். நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறுங்கள்.

சற்று முன்