சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மேஷம்

Sani-peyarchi-palangal-mesham

மேஷம்
Mesham Rasi
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தருவதாக அமையும். நீங்கள் தொடங்கும் காரியத்தில் கவனத்துடன் இருந்தால் அதில் ஏற்படும் சில பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சனி பகவான் உங்களுக்கு சில கஷ்டங்களை கொடுத்தாலும் அதைவிட அதிகமான நன்மையை கொடுக்கப் போகிறார். சனிபகவானால் கொடுக்கப்படும் கஷ்டத்திலிருந்து நீங்கள் மீண்டு வந்து விட்டால் பின்பு தொடர்ந்து உங்களுக்கு வெற்றி தான். வருமானத்தில் குறைவு ஏற்பட்டாலும் மன நிம்மதியானது இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உங்களிடம் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மன தைரியமானது அதிகரிக்கும். உங்களது வார்த்தையில் அதிக கவனம் தேவை. உங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களாக இருந்தால் கூட, அவர்களை இழிவாக நடத்த வேண்டாம். உங்களுக்கு தீங்கு செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

வேலை தேடுபவர்களுக்கு
இதுநாள்வரை வேலை கிடைக்காமல் கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல வேலையை தேடிக் கொடுக்கும். ஆனால் உங்களின் கடின உழைப்பால் தான் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதிக முயற்சியில் ஈடுபட்டு, அக்கறையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கொஞ்சம் அலட்சியப்போக்கு இருந்தாலும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு
நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களே உங்களை சிக்கலில் சிக்க வைத்து விடுவார்கள். உங்களின் மேலதிகாரி உங்களிடம் கொடுக்கும் பொறுப்பினை நீங்கள் யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் வேலையை நீங்களே முடிப்பது நல்லது.

Sani Bagavan

மாணவர்களுக்கு
10ஆம் இடத்தில் இருக்கும் சனி 12-ம் இடத்தை பார்க்கப் போகின்றார். படிப்பில் தேவையில்லாத விரயச் செலவுகள் அதிகமாகும். கெட்ட சகவாசம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் நட்பு வட்டாரத்தில் கவனத்துடன் பழகவேண்டும். உங்களது கவனத்தை படிப்பில் மட்டும் ஈடுபடுத்துவது நல்லது. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகாமல் மனதை கட்டுப்படுத்தி, நல்ல பழக்க வழக்கத்துடன் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

திருமணம்
திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அதில் தாமதமான சூழ்நிலைதான் இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்து கொண்டு பெரியவர்களின் ஆலோசனையுடன் திருமண முடிவை எடுக்க வேண்டும்.

- Advertisement -

Sani Baghavan

சுய தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
இதுவரை ஒன்பதிலிருந்து சனி அதிக நஷ்டத்தை கொடுத்திருப்பார். தற்சமயம் உங்களின் தொழிலுக்கும், வியாபாரத்திற்கும் எந்த பாதிப்பும் வராது. அதிகமாக உழைப்பு இருக்கும். குறைவான லாபமே கிடைக்கும். அதற்காக உழைக்காமல் விட்டுவிடாதீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்றுத்தரும் காலமானது வரப்போகிறது. அலைச்சல் இருக்கத்தான் செய்யும். உங்களின் வெற்றியானது உங்களுக்கு மிக அருகில் தான் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். ஆனால், உங்களிடம் வேலை செய்பவர்களிடம் உஷாராக இருங்கள். உங்களிடம் வேலை செய்பவர்களே உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

mesham

பரிகாரம்
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுத்து வரலாம். குலதெய்வ வழிபாடு அவசியம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவிகள் செய்து வரலாம்.

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.