சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – சிம்மம்

Sani-peyarchi-palangal-simmam

சிம்மம்
simmam
இது நாள் வரை எப்படிப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் சந்தித்திருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இந்த சனிப் பெயர்ச்சியில் நீங்க போகிறது. இந்த சனிப்பெயர்ச்சயானது சிம்மராசிக்காரர்களான உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரப்போகிறது. அடுத்து வரப்போகும் இரண்டரை வருடங்களுக்கு நீங்கள் வெற்றியின் உச்சத்தை தொட போகிறீர்கள். இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்த சனிபகவான், 6ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். ஆறாம் இடத்தில் உள்ள சனி பகவான் அள்ளிக் கொடுப்பார். ஆனால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வண்டி ஓட்டும் போது சற்று கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல செய்தி உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் மறைந்து அன்யூன்யம் ஏற்படும். உங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணவரவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அமோகம் தான்.

வேலை தேடுபவர்களுக்கு
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சனிப்பெயர்ச்சி நல்ல வேலையை கொடுக்கப் போகிறது. அதுவும் நீங்கள் விரும்பிய வேலையே உங்களுக்கு அமையும். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே மேல் அதிகாரிகளுக்கு உங்களிடம் நல்ல நம்பிக்கை ஏற்படும். உங்கள் மேலதிகாரியிடம் நல்ல பாராட்டையும் வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான சம்பளம் தான் உங்களுக்கு கிடைக்கும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு
நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் பேசும் வார்த்தைக்கு உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். உங்களது பேச்சு திறமை, அடுத்தவர்கள் மதிக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக உயரும். உங்களுக்கு கிடைக்கப்போகும் வளர்ச்சியும், நல்ல பெயரையும், பதவியையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்களின் அறிவுத் திறமையையும், ஆற்றலையும் கொஞ்சம் முன்னேற்றி கொள்வது நன்மை தரும்.

 sani-baghavan

மாணவர்கள்
நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வு எழுதி மதிப்பெண்களை பார்க்கும்போது இது நம்முடைய மதிப்பெண் தானா என்று உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அந்த அளவிற்கு நல்ல மதிப்பெண் பெற போகிறீர்கள். உங்களின் மன விருப்பம் போல என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு உடனே கிடைத்துவிடும். இந்த நல்ல நேரத்தினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லக்கூடிய காலம் இது.

திருமணம்
திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்கும். திருமணம் நிச்சயிக்கப்படும். ஆனால் சுபநிகழ்ச்சி நடக்கப்போகும் சமயத்தில் திடீரென்று ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு விலகும். பாதிப்புகள் எதுவும் பெரிதாக இருக்காது. திருஷ்டி கழிந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

 sani-baghavan

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
நீங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள், உங்களது வியாபாரம் இவ்வளவு முன்னேற்றம் அடையப்போகிறது என்று. வியாபாரத்தில் வரும் வருமானத்தை உங்களால் கணக்கிட்டுகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். புதியதாக தொழில் தொடங்கினாலும் கூட உடனடியாக லாபத்தை அடையலாம். வெற்றிமீது வெற்றி வந்து உங்களை சேரப் போகிறது. வெற்றிக் கொடியை நாட்டுபவர்களுக்கு அடக்கமும் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனை வராது.

simam

பரிகாரம்
ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம். திங்கட்கிழமைகளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் – கடகம்

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.