12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்

sani

ஆயுள் காரகனாகிய சனி பகவான் மே 10 தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை வக்ரகதியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் 12 ராசியினருக்கும் ஏற்பட உள்ள பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
Mesham Rasi

வீண் விரையங்கள் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிறரின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபங்கள் ஏற்படும். அலுவலகங்களில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi

சனி பகவான் வக்கிர கதியில் வரும் இக்கால கட்டங்களில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். சிறிது உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிகளில் எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் தாமதங்கள் உண்டாகும். வியாபாரங்களில் கனிவான அணுகுமுறை மேற்கொள்வதால் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்:
midhunam

- Advertisement -

மீன ராசிக்கு சனி பகவான் ஏழாம் வீட்டில் நின்றாலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைந்து இருப்பதால் உடல் ஆரோக்கிய நிலை மேம்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும். பணியிடங்களில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

சனி பகவான் வக்கிரம் அடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் கடக ராசியினர் வாகனம் ஓட்டும்போதும் இன்ன பிற விடயங்களிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. சிலர் அலுவலகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவிலான உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
simmam

சிம்ம ராசியினருக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல வித தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலர் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு விடயத்திலும் வயதில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. தொழில்,வியாபாரங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெற்றி பெற முடியும். பிறரின் விடயங்களில் தலையிடாமல் இருப்பதால் வீண்வம்பு வழக்குகளைத் தவிர்க்கலாம்.

துலாம்:
Thulam Rasi

பிறரை பற்றி வீண் பேச்சுக்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். செய்யும் காரியங்கள் எதிலும் பொறுமையாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே சுமூகமாக செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
virichigam

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு தெய்வ பக்தி அதிகரித்து கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உறவினர்களிடையே நீடித்து வந்த மனக்கசப்புகள் தீரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு கீழே இருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உங்களுக்கு பாராட்டுக்கள், லாபங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

உங்கள் பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். எந்த ஒரு விடயத்திலும் அவசரப் படாமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று ஒத்தி வைக்க வேண்டும்.

கும்பம்:
Kumbam Rasi

நீங்கள் நீண்ட நாள் மனதில் நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடி அடைந்தவர்களுக்கு விரும்பியபடி வேலை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்க பெறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

மீனம்:
meenam

எந்த ஒரு விடயத்திலும் உங்கள் பலம் அறிந்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான விற்பனை இருக்கும். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது ஒரு சிலருக்கு பணியிடங்களில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டு எந்த ராசியினர் சொந்த வீடு பெறுவார்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sani vakram in Tamil. It is also called as Sani vakram palangal in Tamil or 12 rasi in Tamil or Sani bhagavan vakram in Tamil or Sani vakram palangal in Tamil.