சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று யார் இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் கஷ்டம் என்பதே வராது. அதாவது தீர்க்க முடியாத பிரச்சனை, எங்களுடைய வீட்டில் எதிர்பாராமல் இவ்வளவு பெரிய துக்கம் நடந்து விட்டது என்று சிலபேர் சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல பேராபத்தோ, பேர் அதிர்ச்சியோ, பெரும் துக்கமோ உங்கள் குடும்பத்திற்கு வராது. அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் சுபகாரியத் தடை இருக்காது.
அந்தந்த வயதில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நடக்க வேண்டிய அந்தந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். திருமண வரம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, கணவருக்கு வருமானம், ஆரோக்கியம் என்று அத்தனை செல்வங்களும் உங்கள் வீடு தேடி வர செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தாயார் வழிபாடு
உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். சனிக்கிழமை காலை அல்லது மாலை எந்த நேரத்திலோ பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். நேராக தாயாரை சென்று தரிசனம் செய்ய வேண்டும். தாயாருக்கு வாசனையான பூ கொஞ்சம் கொடுத்துவிட்டு, தாயார் சன்னிதியில் 5 மண் அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள்.
பிறகு பெருமாளுக்கு துளசி வாங்கி கொடுத்துவிட்டு பெருமாளையும் சேவித்து விட்டு, பெருமாளையும் தாயாரையும் சேர்த்து 21 முறை வலம் வர வேண்டும். உங்களுடைய கோரிக்கைகளை சொல்லி இந்த வழிபாட்டை செய்து, பிறகு நமஸ்காரம் செய்து பிரார்த்தனை வைத்து வீடு திரும்ப வேண்டியதுதான். இவ்வளவுதான் பரிகாரம்.
இதை வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும். என்ன நினைத்து இந்த வேண்டுதலை நீங்கள் செய்ய துவங்கினீர்களோ, அந்த வேண்டுதல் 3 சனிக்கிழமை, 5 சனிக்கிழமைக்குள் நிச்சயம் பலிக்கும். ஆனால் அதற்கு மேலும் இந்த வழிபாட்டை நிறுத்தி விடக்கூடாது.
உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு சீரும் சிறப்புமாக செல்வ செழிப்போடு இருக்க தொடர்ந்து பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமை செல்லுங்கள். தாயாருக்கு விளக்கு போட்டுவிட்டு, தாயாரிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு, பெருமாளிடம் வரத்தை கேட்டுப்பாருங்கள். இந்த முறையில் வழிபாடு செய்தால் இல்லை என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் இல்லை.
இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை நெல்லி மர வழிபாடு
அந்த அளவுக்கு கோடி கோடியான செல்வ வளமும் பெருகும். குடும்பத்தில் சந்தோஷமும் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான வழிபாட்டை நாளைய தினத்திலிருந்து தொடங்குங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.