கொரோனாவுக்காக ஒன்றிணைந்த இராணுவ வீரர்கள். ஒரு கிராமத்தையே புரட்டிப்போட்ட சம்பவம்

Military donating

கொரோனா தாக்கத்தால் உலகமே தத்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் இந்திய தேசத்தின் காவல் தெய்வங்களான இராணுவ வீரர்கள் பலர் ஒன்றிணைந்து தங்களால் முடிந்த உதவிகள் பலவற்றை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சாப்டூர் என்னும் கிராமத்தை சேர்ந்த இராணுவம் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் இந்த அசாதாரணமான சூழலில் ஒரு மிகப்பெரிய உதவியை தங்கள் ஊர் மக்களுக்கு செய்துள்ளனர்.

சாப்டூர் கிராமத்தை சேர்ந்த இராணுவம் மற்றும் துணை இராணுவப்படை வீரர்கள் சுமார் 150 பேர் வரை பகிரி (வாட்ஸாப்) குழுவின் மூலம் இணைந்து, கொரோனா நிவாரண நிதியாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் திரட்டி உள்ளனர். இந்த பணத்தை கொண்டு தங்கள் ஊரில், ஊரடங்கால் முடங்­கி­யுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.

இன்று (15/5/2020), சமூக இடைவெளியை சீராக கடைபிடித்து உதவி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாப்டூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம அலுவலர் அவர்களும் பங்கு பெற்றனர்.

donation

- Advertisement -

இந்திய எல்லையை காப்பது மட்டும் எங்கள் கடமை அல்ல, எங்கள் ஊரை காப்பதும் எங்கள் கடமை தான் என்று நிரூபித்துள்ளனர் இந்த வீரர்கள். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர்களில் சிலர் மீண்டும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் இந்த வேளையில், தாங்கள் எங்கிருந்தாலும் நாட்டுகாவே வாழுவோம் என்பதை நிரூபித்துள்ளனர்.  இவர்களுக்கு நாம் ஒரு சல்யூட் அடிக்கலாமே.

இந்த உதவிகளை புரிந்த இராணுவம் மற்றும் துணை ராணுவப்படை வீரர்களை வாழ்த்த எண்ணுவோர், +91 98438 22748 / +91 75689 78349 என்ற எண்கள் மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தலாம்.

donation

இது போன்ற மனிதநேயமுள்ளவர்கள் இந்த தேசத்தில் இருப்பதால் தான் இன்றும் நம் தேசம் உயிர்ப்புடன் இருக்கிறது. மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் இவர்கள் தான் அந்த மகேசன் என்று சொன்னால் அது மிகையாகாது.