11 நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் பகை நீங்கி 7 ஜென்ம பாவங்களும் நீங்குமாம்! திருஷ்டிகள், உடல்நல பிரச்சனைகள் உடனே தீரும்!

- Advertisement -

தானே இறைவன் என்று அகந்தை கொண்டு திரிந்து கொண்டிருந்த அசுரனாகிய இரண்யகசிபுவை அழிக்க அவதாரம் எடுத்தவர் நரசிம்மர் ஆவார். மிகுந்த உக்கிரத்தில் இருந்த நரசிம்மரை ஆசுவாசப்படுத்த தோன்றியவர் தான் சரபேஸ்வரர். சிவபெருமானே சரபேஸ்வரர் அவதாரமெடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்தினார் என்கிறது புராணம். இவரை வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்கி பகைவர்கள் தொல்லை ஒழியும் என்பது நம்பிக்கை. இவரை எப்படி வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sarabeswarar 1

சரபேஸ்வர மூர்த்திக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் ராகு கால சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதாவது ஞாயிற்றுக்கிழமையில் சரபேஸ்வரருக்கு ராகுகால சிறப்பு பூஜை செய்வது உண்டு. பகைவர்கள் தொல்லை நீங்கவும், பாவங்கள் ஒழியவும் உடலில் ஏற்படும் புண்கள், நோய்கள் நீங்கவும், திருஷ்டிகள் கழியவும் இவரை வழிபடலாம். சரபேஸ்வரர் சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அதுபோல அவருக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வழக்குகளில் சாதக பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இவருக்கு எலுமிச்சை பழ மாலை மற்றும் வடைமாலை சாற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

சரபேஸ்வரர் சன்னிதியில் நின்றாலே அவருடைய கண் பார்வை நம் மீது படும். சரபேஸ்வரரின் கண் பார்வை பட்டாலே அத்தனை பிரச்சினைகளும் தீர்வாக பக்தர்கள் நம்புகின்றனர். பகைவர்கள் தொல்லை, அரசாலும் அரசர்கள் தொல்லை, கள்வர்கள் தொல்லை, திடீர் மரணம், வலிப்பு, ஜுரம், சண்டை சச்சரவுகள் அனைத்து பிரச்சனைகளும் நொடியில் தீர்வதாக நம்பிக்கை உள்ளது. வாழும் பொழுதே சொர்க்கமும், நரகமும் அனுபவிப்பவர்கள்! வாழும் பொழுதும், வாழ்ந்த பிறகு இன்புற்று வாழ சரபேஸ்வரரை வணங்கி வழிபட வேண்டும்.

sarabeswarar 2

மனித உருவம், யாழி, பறவை ஆகிய மூன்றும் கலந்த சரபேஸ்வரர் அகந்தையை அழிக்க கூடியவர். நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள், தான் என்ற அகம்பாவம் ஆகியவற்றை ஒழித்து நற்கதியை பெறச் செய்வார். அவருடைய கீழ்வரும் இந்த மந்திரங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் 11 தீபம் ஏற்றி உச்சரித்து வந்தால் மேற்கூறிய அத்தனை பலன்களும் கிடைக்கும். நமக்கு எவ்வளவு துர்குணங்கள் இருந்தாலும் இரணிய கசிபுவை அழித்தது போல சரபேஸ்வரரை வணங்குபவர்களுக்கு துர்குணங்கள் நீங்கும். நம்மையறியாமலேயே நாம் செய்யும் தவறு நாம் தான் எல்லாம் என்கிற சுயநலம் கொண்ட உணர்வு தான். இந்த அகந்தை, ஆணவத்தை அழிக்க சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

கெட்ட சக்தி நீங்க மந்திரம்:
ஹராய பீமாய ஹரிப்ரியாய!
பவாய சாந்தாய பராத்பராய!
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய!
நமோஸ்து துப்யம்!
சரபேச்வராய ஸ்ரீ சரபாஷ்டகம்!

sarabeswarar 4

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
ஓம் சாலுவேசாய வித்மஹே!
பக்ஷிராஜாய தீமஹி!
தந்நோ சரப ப்ரசோதயாத்!

sarabeswarar

சாரபேஷ்வரர் மூல மந்திரம்:
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி!
ஹாஸி, பிராணக்ர ஹாஸி!
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய!
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா!

Sarabeswarar 5

எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள், தன்னை தவிர உயர்ந்தவர் யாருமில்லை என்கிற செருக்கு கொண்டவர்கள் இவரை வழிபடலாம் மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை அடக்கி வைத்திருப்பவர்கள், எமபயம் உள்ளவர்கள், நோய் தாக்குதல்கள் அதிகரித்து தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பயம் உள்ளவர்கள் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -