சரஸ்வதி தேவியின் தமிழ் ஸ்தோத்திரம் – இன்று பூஜையில் பாடலாம்

saraswathi-manthiram
- Advertisement -

கல்விக்கடவுளாய் இருந்து உலக மக்களுக்கு கல்வி செல்வதை அல்லி தருபவள் தாய் சரஸ்வதி. அவளுக்குரிய நாளான இன்று அவளின் பாதம் பணிந்து, அவளை போற்றும் வகையிலான மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி மகிழ்வது நம் பூஜையை மேலும் சிறப்படைய செய்யும். அந்த வகையில் சரஸ்வதி தேவிக்குரிய ஸ்தோத்திரம் இதோ உங்களுக்காக.

சரஸ்வதி ஸ்தோத்திரம் தமிழ்
உலகோர் இதயம் அமர்பவளே
பிரமன் கழுத்தில் அமைபவளே
நிலவும் விரும்பும் சுடர் நிலவே
சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

- Advertisement -

ஞான அறிவினை தருபவளே
நல்ல உயர்வினை அருள்பவளே
வீணையை ஏந்திய தூயவளே
சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

அயிம் அயிம் கிரீம் க்ராம் மந்திரத்தை ஆசை கொண்ட சுடர் ஒளியே
சிறு மதியோரை நசிப்பவளே
சரஸ்வதியே
உன்னை வணங்குகிறேன்

- Advertisement -

அஞ்ஞான இருளை ஒழிப்பவளே
ஆட்படாத நிலை விளைப்பவளே
அழகிய வெண்மை நிறத்தினலே
சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

முக்தி அளிக்கும் வித்தயலே
தாமரை அமர் எழில் மேனியளே
குண்டலம் அணிந்த மங்கலியே
சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

- Advertisement -

சூர்ய மண்டலம் வசிப்பவளே
சந்தோசத்தை தருபவளே
விஷ்ணுவின் பிரியையே
வானியலே
சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

சரஸ்வதி ஸ்தோத்திரம் உரைத்து
பிரகஸ்பதியோ ஓர் மாதம் துதி செய்ய
கலைவாணியோ குளிர்கால மதிபோல் எழுந்தால்
கோரிக்கை தனை கேட்டறிந்தாள்
வேண்டியது எதுவே வேண்டிகொள்
விரைவாய் மங்களம் பெருகுமென்றால்
வேண்டு வதெல்லாம் ஞானம் ஒன்றே என்றான் பிரகஸ்பதி அதை தந்தாள் சரஸ்வதி

வேதம் அறிந்தவன் துதியிதனை
ஓதிட ஓதிட எனதறிவு போன்ற உத்தம ஞானத்தை
உண்மையில் அடைவார் அது திண்ணம்
தினமும் முன்று காலத்தில்
இந்த ஸ்தோத்திரம் ஜபம் செய்யும் அடியாரிடம் நான் வாழ்ந்திடுவேன்
என்றாள் அன்னை சரஸ்வதி

- Advertisement -