சரஸ்வதி 108 போற்றி

Saraswathi
- Advertisement -

கல்வி என்பது அனைவருக்குமே கிடைக்க வேண்டிய ஒன்றாகும். கல்வியை அனைவரும் கற்றாலும் அந்த கல்வி மற்றும் கலைகளில் ஒரு சிலரால் மட்டுமே நிபுணத்துவமும் சிறந்த தேர்ச்சியும் பெற முடிகிறது. இத்தகைய நிலை உண்டாக கலைவாணி சரஸ்வதி தேவியின் அருள் அவசியம். தற்காலத்தில் அனைவருமே வேலை மற்றும் உயர்கல்விக்காக பல விதமான போட்டி தேர்வுகளை எழுதுகின்றனர். அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான சரஸ்வதி 108 போற்றி இதோ.

Goddess Saraswathi

சரஸ்வதி 108 போற்றி

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

- Advertisement -

ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

Goddess Saraswathi

ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி

- Advertisement -

saraswathi 2

ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

saraswathi 1

கலைவாணி ஆகிய சரஸ்வதியை போற்றும் 108 போற்றி துதிகள் இது. இந்த போற்றி துதியை தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும், வீட்டின் பூஜையறையில் இருக்கும் சரஸ்வதி படத்திற்கு, பத்திகளை கொளுத்தி வடித்து படித்து வருதல் நல்லது. நவராத்திரி காலத்தில் வரும் “சரஸ்வதி பூஜை” தினத்தில், சரஸ்வதி தேவிக்கு பால், பொரி, பழம் போன்றவைகளை நிவேதனமாக வைத்து, தூபங்கள் கொளுத்தி வைத்து மனஒருமைப்பாடுடன் சரஸ்வதியை இத்துதிகளை துதித்து வணங்குவதால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்த தேர்ச்சி பெற முடியும். அரசு வேலை, இன்ன பிற வேலைகள் மற்றும் உயர்கல்விக்காக போட்டி தேர்வு எழுதுபவர்கள் போன்றோர்களுக்கு அவர்களின் முயற்சியில் வெற்றியுண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியை கற்று தேறுவார்கள்.

- Advertisement -

நம்மிடம் இருக்கும் தீமைகள், துரதிர்ஷ்டங்கள் போன்றவற்றை நீக்கும் விரதம் இருக்க கூடிய சுபதினங்களாக நவராத்திரி விழா காலம் இருக்கிறது. இந்த விழாக்காலத்தில் 9 ஆவது நாளாக வருவது தான் சரஸ்வதி பூஜை தினம். மனிதர்கள் அனைவருக்குமே கல்வியறிவு, கலைகளில் தேர்ச்சி, ஞானம் ஆகிய மூன்றையும் அருள்பவள் சரஸ்வதி தேவி. கலைமகளான சரஸ்வதி தேவியை அந்த சரஸ்வதி தினத்தில் பூஜித்து வணங்குவதால் நமக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் இன்ன பிற வரங்களையும் தந்து மெய்ஞ்ஞானத்தையும் புகட்டுவாள்.

இதையும் படிக்கலாமே:
சரபேஸ்வரர் போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saraswati 108 potri in Tamil or Saraswati potri in Tamil. It is also called as Saraswati potri mantra in Tamil or Saraswati 108 potri lyrics in Tamil.

- Advertisement -