வியாச முனிவர் கூறிய இந்த 3 வரி எளிய மந்திரங்களை தினமும் சொன்னாலே போதும்! எந்த நோயும் நொடியில் தீரும்!

munivar-lalitha

ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைந்து இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இப்படி எல்லா வகையான மந்திரங்களையும் கற்றுணர்ந்த வேத வியாசர் இந்த மந்திரத்தை சர்வரோக நிவாரண மந்திரம் என்று கூறுகிறார். மூன்று வரியில் அமைந்திருக்கும் இறைவனின் இந்த திருநாமங்கள் எவர் ஒருவர் தினமும் சொல்கிறார்களோ! அவர்களுக்கு எத்தகைய நோய்களும் அண்டுவதில்லை. அப்படியான மந்திரம் என்ன? அதன் வியப்பிற்குரிய வரலாறு என்ன? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்வோம் இப்பதிவை..

lalitha-thiripura-sundari

ஒருமுறை அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கும், பண்டாசுரன் என்பவனுக்கும் பலமான போர் ஒன்று நடந்தது. இப்போரில் எதிரெதிர் திசையில் நின்று கொண்டு மஹா அஸ்திரங்களை வீசி ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அன்னை சக்தியின் சேனையின் மீது பலதரப்பட்ட அஸ்திரங்களை தொடுத்து போர் புரிந்து கொண்டிருந்தான் பண்டாசுரன். அதற்கு எதிர்வினை அஸ்திரங்களையும் அன்னையின் சேனை தொடுத்து வெற்றி கொண்டார்கள்.

இப்படியே போர் தொடரும் பொழுது திடீரென பண்டாசுரன் மஹா ரோகாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை அன்னை சேனையின் மீது தொடுக்க பலவிதமான நோய்கள் வந்து தாக்கி சக்திகள் அனைவரும் பரிதவித்து நின்றனர். அப்பொழுது லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அன்னை பராசக்தி சர்வரோக நாமத்ரய என்னும் மகா சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை பண்டாசுரனை நோக்கி தொடுத்து எல்லா நோய்களையும் விரட்டி அடித்து வெற்றி கொண்டார்.

mantra-thiyanam

இந்த மந்திரத்தை சொல்வதற்கு தனியாக யாரிடமும் தீட்சை பெற வேண்டிய அவசியமில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் நோய் நொடிகள் யாவும் நீங்கும். நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை ஜபமாக ஜபித்து வந்தால் நம் உடலில் இருக்கும் சக்திகள் தூண்டப்பட்டு நோய்களை எதிர்த்துப் போராடும். சாதாரணமாக ஒரு நாளைக்கு 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது 108 முறை எழுத்து வடிவமாக எழுதினாலும் பெறற்கரிய பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

நாமத்ரய மஹா மந்திரம்:
ஓம் அச்சுதாய நம!
ஓம் அனந்தாய நம!
ஓம் கோவிந்தாய நம!!

இம்மந்திரம் ஸ்ரீமன் நாராயணன் உடைய மூன்று திவ்ய திரு நாமங்கள் ஆகும். இந்த மூன்று பெயர்களையும் ஒரு சேர மந்திரமாக உச்சரித்தால்! அது நம் மீது நாமத்ரய மந்திர அஸ்திரமாக மாறும். பண்டாசுரன் பலவகையான நோய்களை அன்னையின் மீது ஏவி விட்டாலும், அதனை எதிர்த்து போராடியது இந்த மகா மந்திரம் தான். எனவே எத்தகைய நோய்கள் நம்மிடம் நெருங்கும் பொழுதும் சர்வரோக நிவாரணியாக செயல்படும் இந்த மந்திரத்தை தவறாமல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உச்சரிப்பது பலன் தரும்.

om-mantra

இறைவனின் திருநாமங்களை உச்சரிக்க உச்சரிக்க நம் உடலில் ஒரு விதமான மாற்றம் நிகழ்வதை நாமே கண்கூடாக உணர முடியும். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதே நம் அடிவயிற்றிலிருந்து, உச்சந்தலை வரை சில அதிர்வுகள் உண்டாகும். மந்திரங்கள் என்பது அதிர்வலைகளை கொண்ட மகா சக்தி ஆகும். இந்த சக்தியின் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று நம் முன்னோர்கள் தீர்க்கமாக நம்பினார்கள். நாமும் இப்போது எதிர்கொண்டு வரும் அத்துணை பிரச்சினையும் தீர இம்மந்திரத்தை உச்சரித்து பயன் பெறுவோம்.