இன்று தேய்பிறை சஷ்டி. இன்று மதியம் 2:07 முதல் நாளை மதியம் 12:43 வரை சஷ்டி திதி என்பது இருக்கிறது. அதனால் இரவு நேர சஷ்டியாக நாம் இன்று இரவை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முருகப் பெருமானுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்யக்கூடிய அனைத்து பக்தர்களும் முருகப்பெருமானை நினைத்து சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
அவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது எந்த வேண்டுதலை முன்வைத்து நாம் விரதம் இருக்கிறோமோ அந்த வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெறச் செய்யும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் அருள் பெற வழிபாடு
இந்த வழிபாட்டை செய்வதற்கு எந்தவித தீட்டும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் கூட செய்யலாம். பெண்கள் தீட்டு சமயத்திலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நாம் பூஜையறைக்கு செல்ல வேண்டும், தீபம் ஏற்ற வேண்டும், அர்ச்சனை செய்ய வேண்டும் என்று எதுவும் கிடையாது. இரவு படுக்கச் செல்வதற்கும் முன்பு இந்த வழிபாட்டை நாம் செய்தால் போதும்.
எப்பொழுதும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வீட்டு நிலை வாசல் கதவை நாம் மூடுவோம் அல்லவா? அவ்வாறு மூடும் பொழுது இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். நிலை வாசல் கதவை மூடுவதற்கு முன்பாக நிலை வாசல் கதவை மூன்று முறை தொட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொட்டு வணங்கும் பொழுது “ஓம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இப்படி நாம் தொட்டு வணங்கும் பொழுதும் ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
அவ்வாறு நாம் தொட்டு வணங்கும் பொழுது முருகப்பெருமானையே நாம் தொட்டு வணங்குவது போல் மனதார உணர்ந்து தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு தொட்டு வணங்கிய பிறகு கதவை சாற்றி விட்டு படுத்து உறங்கலாம். இந்த முறையில் சஷ்டி திதியான இன்று இரவு இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருள் என்பது நமக்கு கிடைக்கும். இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. முருகப்பெருமானின் அருள் இருந்தால் நமக்கு அனைத்துமே நல்லதாகவே நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை சஷ்டி விரதம்
முருகப் பெருமானை நினைத்து இன்று இரவு உறங்கும் முன் இந்த முறையில் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.