சத்துமாவை கொடுத்தால் உங்கள் பிள்ளைகள் சாப்பிட மறுக்கிறார்களா? அப்படின்னா சத்து மாவுல அடை செய்து கொடுங்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் நாம் அவர்களுக்கான ஊட்டச்சத்துகளை கட்டாயமாக தர வேண்டும். குறிப்பிட்ட வயது வரை நாம் கொடுக்கும் உணவை உண்ணும் அவர்கள், இது தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்ணும் வேளையில் அவர்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவை நாம் சரியாக கொடுக்க தொடங்கி விட வேண்டும். அப்படி அனைத்து ஊட்டச்சத்தும் நிறைந்த ஒரு பொருள் தான் இந்த சத்து மாவு.

சத்து மாவில் நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அத்தனை பொருட்களையும் சேர்த்து தான் அரைப்போம். அல்லது கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாவு வாங்கி கொடுப்போம். ஆனால் இதை குழந்தைகள் விரும்பி உண்பதே இல்லை. நாம் கட்டாயப்படுத்தி தான் அவர்களை சாப்பிட வைக்கிறோம். ஒரு நல்ல சத்து உள்ள பொருளை அவர்களே கேட்டு வாங்கி சாப்பிட நாம் என்ன செய்வது என்று இனி யோசிக்க தேவை இல்லை. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது சத்துமாவு அடை தான். இந்த அடை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள வாங்க பதிவுக்கு உள்ள போகலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: சத்துமாவு – 1 கப், கோதுமை மாவு – 1/4 கப், வெல்லம் – 1/4 கப், பால்(காய்ச்சியது) – 1/4 கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ஏலக்காய் -1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

முதலில் ஒரு பௌலில் சத்துமாவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கோதுமை மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். கலந்த மாவில் உப்பு சேர்த்துக் கலந்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கலந்து வைத்த மாவில் வெல்லம், வெண்ணெய், ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். அப்போது வெல்லம் இளகி மாவுடன் கலந்து வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி (தண்ணீர் ஊற்ற வேண்டாம் இது பாலிலே தான் கலக்க வேண்டும்) கலந்து கொள்ளுங்கள். இதை இட்லி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மீதமான இட்லி இருந்தா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க. இதிலிருந்து ஒரு துண்டு இட்லி கூட யாருக்கும் மிச்சம் கிடைக்காது.

அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் வைத்தாலே போதும். பிறகு நீங்கள் அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி இந்த மாவை தோசை போல் மெலிசாக ஊற்றாமல், அடை பதத்திற்கு ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து மறுபடியும் திருப்பி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் ரொம்பவே ஹெல்தியான சத்து மாவு அடை தயாராகி விட்டது.

- Advertisement -