வெறும் 4 பொருள் சேர்த்த சத்துமாவு கஞ்சி. ஆயுசுக்கும் இடுப்பு வலி, மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, வராமல் ஆரோக்கியமாக இருக்க, தினமும் 1 டம்ளர் இந்த கஞ்சியை குடித்தாலே போதும்.

kanji
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியத்தோடு சேர்த்து வலிமையும் தரக்கூடிய ஒரு சத்து மாவை எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சத்து மாவு கஞ்சியை தொடர்ந்து தினந்தோறும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் உடலில் இருக்கும் எலும்புகள் வலிமை பெறும். எலும்புகள் சீக்கிரத்தில் உடைந்து போகாது. நரம்புகள் தளர்ச்சி அடையாது. இடுப்பு வலி வராது. ஆயுசுக்கும் இரும்பு மனிதர்கள் போல நன்றாக வேலை செய்யலாம். சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளும் இந்த கஞ்சியை குடித்தால், அதிகப்படியான நன்மையைப் பெறலாம். சரி, அந்த சத்துமாவு கஞ்சியை எப்படி அரைப்பது. தெரிந்து கொள்வோமா.

kambu

சத்து மாவு அரைக்க தேவையான அந்த 4 பொருட்கள் என்னென்ன. சோளம் – 1/2 கிலோ, கம்பு – 1/2 கிலோ, கேழ்வரகு – 1/2 கிலோ, கருப்பு உளுந்து – 1/2 கிலோ.

- Advertisement -

இந்த நான்கு பொருட்களையும் அப்படியே வாங்கி ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, தண்ணீர் ஊற்றி முதலில் நன்றாக கழுவிவிடுங்கள். ஈரமாக இருக்கும் இந்த நான்கு தானியத்தையும் ஒரு தட்டில் அல்லது துணியின் மேல் பரப்பி, நன்றாக உலர வைத்து விடுங்கள். வெயிலில் காய வைத்தாலும் சரி தான். ஃபேன் காற்றில் காய வைத்தாலும் சரிதான்.

kanji1

நான்கு தானியங்களும் நன்றாக ஈரம் போக உலர்ந்தவுடன், இதை கடாயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எண்ணெய் எதுவும் ஊற்றாமல், வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்துவிடுங்கள். ஒரு ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி, அப்படியே ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து வாருங்கள். சத்துமாவு பொடி தயார். நம் கையாலேயே வாங்கி சுத்தம் செய்து அரைத்த கலப்படமில்லாத சுத்தமான சத்து மாவு தயார்.

- Advertisement -

இதை எப்படி கஞ்சி காய்ச்சி குடிப்பது. 3 ஸ்பூன் அளவு ஊட்டச்சத்து நிறைந்த இந்த கஞ்சி மாவுக்கு, 400ml அளவு தண்ணீர் தேவைப்படும். இந்த அளவுகளில் எடுத்துக்கொண்டால் ஒருவர் குடிப்பதற்கு சரியாக இருக்கும். சத்து மாவையும் தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கட்டி படாமல் கரைத்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் 7 நிமிடங்கள் காய்ச்சினால் சத்துமாவு கஞ்சி கொஞ்சம் கட்டி பிடித்து வரும். இந்த கஞ்சி மாவு கொதித்து வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி 2 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து அப்படியே குடித்து விடலாம்.

kanji3

சில பேர் இதை இனிப்பு சுவையுடன் குடிக்க ஆசைப்படுவார்கள். நாட்டு சர்க்கரை, வெல்லம் சேர்த்தும் இந்த சத்து மாவு கஞ்சி பருகலாம். தண்ணீரில் காய்ச்சிய சத்துமாவில் அரை டம்ளர் காய்ச்சிய பாலை கலந்து குடித்தாலும் சுவையாகத்தான் இருக்கும். அது உங்களுடைய இஷ்டம்தான். தேவைப்பட்டால் இந்த சத்து மாவில் ஏலக்காய் சேர்த்தும் அரைத்து மணமாகவும் குடிக்கலாம். அதுவும் உங்களுடைய விருப்பம் தான். ஆனால் கட்டாயமாக நான்கு தானிய வகைகளை இதில் சேர்க்க வேண்டும். சோளம், கம்பு, கேழ்வரகு, கருப்பு உளுந்து. ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமா, குடிச்ச 3 மாசத்துல உடம்பில் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -