இன்று சனிக்கிழமை! சனிபகவானின் ஆசியைப் பெற, சகல தோஷங்களும் நீங்க, இன்று மதியம் என்ன சமைக்கலாம்?

sani-bhagavan
- Advertisement -

சனிக்கிழமை என்றாலே சனி பகவானுக்கு உரிய தினம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! சனிக்கிழமை தினமான இன்று, சனிபகவானின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றாலும், நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய, தோஷங்களால் எந்த ஒரு பிரச்சனையும், நம் வாழ்க்கையில் வராமல் இருக்க வேண்டும் என்றாலும், இன்று மதியம், என்ன சமைக்கலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சனிக்கிழமை, சனிபகவானோடு சேர்த்து, பெருமாளையும் நாம் வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும் இன்று தெரிந்து கொள்ளலாம்.

sani bagavaan temple

சனிக்கிழமை தினமான இன்று மதியம், புளி குழம்பு வைப்பது மிகவும் நல்லது. இதில் அவரவருக்கு விருப்பமான காய்கறி சேர்த்துக் கொள்ளலாம். கத்தரிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய் இப்படி எந்த காய் வேண்டுமென்றாலும் சேர்த்து புளி குழம்பு வைத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் புளி குழம்பு வைக்க வேண்டுமென்றால், அதில் நல்லெண்ணெய் சேர்ப்போம். நல்லெண்ணெய் சனி பகவானுக்கு உரியது. சனிபகவானுக்கு உகந்த எல்லையும் நம் சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது. குழம்பிற்கு அரைக்கும் மசாலாவில், ஒரு ஸ்பூன் எள்ளு சேர்த்து, அரைத்து ஊற்றி குழம்பு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உளுந்தினால் செய்யப்பட்ட வடை, கொள்ளு சுண்டல், எள்ளு உருண்டை, வேர்க்கடலை உருண்டை, போன்ற பொருட்களை, பூஜை அறையில் நைவேத்தியமாக வைக்கலாம். நாவல் பழம் சனி பகவானுக்கு உரிய பழமாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பழத்தையும் பூஜை அறையில் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

சனிக்கிழமை கட்டாயம் தயிர் சாதமும் சாப்பிட வேண்டும். காரசாரமாக சூடு சம்பந்தப்பட்ட உணவு வகைகளால், உடல் சூடு ஏற்படும். அந்த சூட்டை தணிக்க  தயிர்சாதம் அவசியம்தானே! மதிய உணவிற்காக நீங்கள் செய்யும் சாப்பாடு, பச்சரிசி சாதமாக இருந்தால் மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது. வாழை இலையைப் போட்டு, சாதத்தை போட்டு, முதலில் அந்த சாதத்தில், ஒரு கைப்பிடி அளவு சாதத்தில், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, சனி பகவானை நினைத்து சாப்பிடுவது, சனிபகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும். தவிர, புளி சாதம், எள் சாதம் போன்ற கலவை சாதனங்களையும் நம் வீட்டில் செய்யலாம்.

- Advertisement -

சரி, சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறவும், எதற்காக பெருமாளையும் சேர்த்து வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்? சனி பகவான், புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் அவதரித்ததாக நம்முடைய புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைவதற்கு, காக்கும் கடவுளான விஷ்ணு பகவானை, வணங்க வேண்டும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

vishnu

சனிக்கிழமைதோறும் உங்கள் வீட்டு பூஜை அறையில், ஒரு மண் அகல் விளக்கில், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, சனி பகவானை மனதார நினைத்து, எள்ளுருண்டை நைவேதனமாகப் படைத்து, சனிதோஷம் நீங்க வேண்டும் என்று தொடர்ந்து 11 வாரங்கள் வேண்டிக் கொண்டால், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற தோஷங்கள் இருப்பவர்களுக்கு கூட, பிரச்சினைகளின் தாக்கம் வெகு விரைவாக குறையும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -