உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க, நோய்கள் தீர இதை செய்தால் போதும்

saturday-sani

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது கலக்கமடைகின்றனர். நீதி தேவனாகிய சனிபகவான் எந்த ஒரு மனிதரும் தனது நேர்மையான செயல்பாடுகளில் இருந்து சிறிது பிசகினாலும் கடுமையாக தண்டிக்க கூடியவர். அதே நேரத்தில் தர்மத்தை பின்பற்றி வாழ்பவர்களுக்கு பல சோதனைகள் கொடுத்தாலும், இறுதியில் அனைத்து வகையான செல்வங்களையும், யோகங்களையும் தரும் கருணை உள்ளம் கொண்டவராக இருக்கிறார். அத்தகைய சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம். இந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் முறை குறித்தும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Sani Baghavan

சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

சனி பகவானின் அம்சம் கொண்டவர் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி ஆவார். எனவே அவரின் சிறிய அளவிலான படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் நீல நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனி பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து சனி பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

Perumal

சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வைக்க வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சனிபகவான் அம்சம் நிறைந்த வெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் வசதி குறைந்த, ஊனமுற்ற நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். நீல நிற ஆடைகள், எள், நல்லெண்ணெய் போன்றவற்றை அளிப்பது உங்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கி சனி பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.

- Advertisement -

sani bagavaan temple

நவகிரகங்களில் சனி பகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குகிறார். மேலும் சுலபத்தில் நோய்கள் பிடிக்காத பலம் வாய்ந்த உடலையும், எந்த சூழ்நிலையிலும் குலையாத மனஉறுதியையும் கொடுக்கிறார். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்க பெறுவார்கள். எதிரிகளால் வெல்ல முடியாத நிலையும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் தனலாபங்கள் பெருக இவற்றை செய்யுங்கள்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saturday vratham in Tamil. It is also called as Sanikizhamai viratham in Tamil or Sani bhagavan in Tamil or Sani bhagavan valipadu in Tamil or Sani kizhamai valipadu in Tamil.