சனிக்கிழமையில் இதையெல்லாம் செய்தால் நீங்களும் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம்!

perumal-ellu

சனிக்கிழமை சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு விசேஷமான கிழமையாக இருந்து வருகிறது. சனிக்கிழமையில் இவர்களை வழிபடுபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த விஷயங்களை எல்லாம் செய்யும் பொழுது நமக்கு இவர்களுடைய பரிபூரணமான அருள் கிடைக்கும்! அப்படி நாம் செய்ய வேண்டியவை என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் அருள் பெற நீங்கள் வடிக்கும் சாதத்தில் சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து அதில் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகள் குறைந்து நன்மைகளை கொடுக்கும்.

சனிக்கிழமைகளில் ஒரு கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிதளவு கல்லுப்பு போட்டுக் கொண்டு கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள். கிழக்கு பார்த்து நின்று கொண்டு உங்கள் தலையை சுற்றி ஏழு முறை திருஷ்டி கழியுங்கள்.

arasa-maram1

இது போல 21 சனிக்கிழமைகள் செய்து வர உங்களுக்கு இருந்த கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வெற்றி வாய்ப்புகள், அதிர்ஷ்டம் யோகங்கள் உங்களை தேடி வரும். சனி பகவான் கொடுக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் செய்யலாம். தலையை சுற்றி ஏழு முறை சுற்றி எடுத்து பின்னர் இதனை கொண்டு போய் ஏதாவது ஒரு அரச மரத்தடியில் போட்டு விட்டு வர வேண்டும்.

- Advertisement -

21 சனிக்கிழமைகளில் தீட்டுக் காரியங்கள் இருந்தாலும் குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். திருஷ்டி கழிக்க தான் இந்த பரிகாரம் செய்யப்படுகிறது. உங்களை பிடித்து இருந்த தரித்திரங்கள், பிழைகள் அனைத்தும் நீங்கும். இதனால் வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது நியதி.

perumal1

சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம். துளசியில் மஹா லக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. நாராயணருக்கு மஹா லக்ஷ்மியை கொடுத்து வணங்கி வருவதால் நம்முடைய வாழ்வு வறுமை இன்றி செழிக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மூலவருக்கு காண்பித்துவிட்டு ஆலயத்தில் வைத்துவிட்டு வந்தால் நினைத்த காரியம் பலிதமாகும்.

hanuman-heart

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது வெற்றியை தரும். மேலும் சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருப்பவர்கள் சனிக்கிழமைகளில் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொண்டு அனுமன் சாலிசா படித்து வர அத்தனை பிரச்சனைகளும் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இதனை செய்து பார்க்கலாம். வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க ஹனுமன் சிலைகளை மாட்டி வைப்பதும் அனுமன் கொடியை சொருகி வைத்து நல்ல பலன்களைக் கொடுக்கும்.

sleep1

இதனை செய்யும் பொழுது சனிக்கிழமைகளில் செய்தால் இன்னும் சிறப்பு பலன்களை பெறலாம். சனிக்கிழமைகளில் இரவில் தூங்கும் பொழுது இரும்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனை நீங்கள் தூங்கும் கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி பாருங்கள், உங்களுக்கு துர் கனவுகள் அண்டாது! நிம்மதியான தூக்கமும் வரும்.