மொட்டை அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

mottai2
- Advertisement -

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முக்கி காணிக்கை செலுத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் மற்றும் ஆன்மிக காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

mottai

குழந்தைகள் முடி காணிக்கை செலுத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல்:

- Advertisement -

பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்றிருக்கும். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து பிள்ளைகளைக் காக்கவே குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறோம்.

குழந்தைகளுக்கு முட்டை அடிப்பதால் முடியின் வேர்க்கால்களின் வழியாகக் கழிவுகள் வெளியேறிவிடும். இதனால்தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதற்காகவே.

- Advertisement -

mottai

ஆன்மிக காரணம்:

தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மொட்டை அடிப்பதன் மூலம், தான் என்னும் கர்வத்தை இழந்து கடவுளுக்கு அருகில் செல்கிறோம்.

mottai

மொட்டை அடிப்பது கடவுளிடம் நமக்கு இருக்கும் பணிவை வெளிப்படுத்துவதாகும். மேலும் ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல், கடவுளை அடையக் கூடிய முயற்சியாகும். கடவுளுக்கு முன் எதுவுமே பெரிதல்ல. இது நமக்கு ஒரு ஞான அறிவைத் தருகிறது. இதனால்தான் முடி காணிக்கை செலுத்துவதை ஒரு முக்கிய சடங்காக நாம் பின்பற்றுகிறோம்.

 

- Advertisement -