வளைகாப்புக்கு பின்னால் இத்தனை ரகசியங்கள் ஒளிந்துள்ளதா? அறிவியல் ரீதியாக, ஆச்சரியப்படவைக்கும் வைக்கும் உண்மைகள்!

valaikkapu
- Advertisement -

முதலில் வளைகாப்பு நடத்துபவர்களிடம் சென்று ‘வளைகாப்பு என்றால் என்ன’? அதை எதற்காக நடத்துகிறார்கள் என்று கேட்டால், ‘அது ஒரு சடங்கு, கட்டாயமாக நடத்த வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்’. அப்படி என்று தான் கூறுவார்கள். அவரவர், அவரவருடைய வீட்டு முறைப்படி வளைகாப்பு சடங்கு முறைகளை நடத்துவார்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், குறிப்பாக வளைகாப்பில், எல்லோரும் கண்ணாடி வளையலை தான் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அணிவிப்பார்கள்! கண்ணாடி வளையல் அணிவதற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கான பதில் நம்மில் பல பேருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

valaikkapu1

அந்த கண்ணாடி வளையல் சத்தம் கேட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும், என்று நம்முடைய பாட்டிமார்கள் சொல்லுவார்கள். நம் அம்மாக்கள் சொல்லுவார்கள். நமக்கும் தெரியும். வாஸ்தவம் தான்! ஆனால், இதில் நமக்குத் தெரியாத அறிவியல் ரீதியான உண்மையும் ஒன்று மறைந்திருக்கின்றது. ஒரு பெண் கர்ப்பம் தரித்த எட்டாம் மாதத்தில் இருந்து, ஒன்பதாம் மாதத்திற்குள் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்கும். அந்த சமயத்தில்தான் முறைப்படி வளைகாப்பும் நடத்துவார்கள் அல்லவா? இது நம் நாட்டினுடைய வழக்கம்.

- Advertisement -

ஆனால், இதேபோல் மேலைநாடுகளில் ஒரு வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். அது என்னவென்றால், பெண்கள் கர்ப்பம் தரித்த எட்டாம் மாதத்தில் இருந்து ஒன்பது மாதத்திற்குள் அந்தப் பெண்ணின், வயிற்றுப்பகுதியில் டால்பின் எழுப்பும் சத்தத்தை ஒலிக்கச் செய்கிறார்கள். அதாவது டால்பின் எழுப்பக்கூடிய அந்த ஒலி அலை வரிசை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின், மூளையை தூண்டி, அறிவாற்றலை வளரச் செய்வதாக, ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டால்பின் தெரபிக்கு வெளிநாடுகளில், லட்ச லட்சமாக பணமும் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

dolphin-therapy

இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த டால்பின் வெளிப்படுத்தும், ஒலி அலை வரிசையும், கண்ணாடி வளையலில் இருந்து வெளிவரும் ஒலி அலை வரிசையும், ஒன்றாக இருக்கின்றது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட டால்பின் தெரபி சிகிச்சை பற்றிய இந்த தகவல் ஆனது, அந்த காலத்தில் இருந்துவந்த, நம் முன்னோர்களுக்கு எப்படி தெரியும்.

- Advertisement -

பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வளைகாப்புக்கு பின்னால், இப்படி ஒரு ஆச்சரியமூட்டும் தகவலை நம்முடைய முன்னோர்கள், விஞ்ஞானம் வளராத காலத்திலேயே எப்படி இதையெல்லாம் கண்டுபிடித்து இருப்பார்கள்? என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் மெய்சிலிர்க்க தான் செய்கிறது. (இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா? மீன் பிடிப்பவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள், டால்பின் எழுப்பும் சத்தம் எப்படி இருக்கும் என்று அவர்கள் சொல்லுவார்கள்.)

valaikappu

ஆனால் நாம், முன்னோர்கள் சொன்ன பழக்கவழக்கத்தை எல்லாம் மூடநம்பிக்கை என்று உதறிவிட்டு, காலம் போன போக்கில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. இறுதியில் என்னதான் நடக்கப் போகின்றதோ?  நம் முன்னோர்கள் செய்த ஒரே ஒரு தவறு என்ன தெரியுமா? அவர்கள் கண்டுபிடித்த விஷயங்களை எல்லாம், நமக்கு சடங்குகள் என்று சொல்லிக் கொடுத்தார்களே தவிர, அவைகளை சைன்ஸ் என்று யாருமே சொன்னதில்லை. அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு அது ஒன்று மட்டும்தான்.

- Advertisement -

இதையெல்லாம் புரிந்து கொண்டு, இனி வரப்போகின்ற இளைஞர்கள் தலைமுறையாவது, நம் முன்னோர்கள் சொன்ன பாதையில் சென்றால் நம் நாட்டிற்கும், நமக்கும் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தாலி கழற்றுவது போன்ற கனவு வந்தால் என்ன பலன்? திருமணமாகாத பெண்ணுக்கு இந்த கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -