பணத்தை சேர்த்து வைக்கும் அஞ்சறைப்பெட்டி ரகசியம்

anjaraipetti

அஞ்சறைப்பெட்டி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதை மசாலா பெட்டி என்றும் சிலர் கூறுவார்கள். பெரும்பாலான வீடுகளில் இந்த பெட்டியானது கண்டிப்பாக இருக்கும். இதுவரை உங்களது சமையல் அறையில் இந்த அஞ்சறைப்பெட்டி இல்லாமலிருந்தால் உடனடியாக வாங்கி வைத்து விடுங்கள். ஒரு வீட்டின் சமையலறையில் முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்களில் இந்த அஞ்சறைப் பெட்டியும் ஒன்று. இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது அதிர்ஷ்டதிற்க்கும் நல்லது. ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது எல்லோரும் அறிந்தது. அதிர்ஷ்டத்திற்கு எப்படி நல்லது என்று சந்தேகமாக உள்ளதா? நம் வீட்டு சமையலறையில் இருக்கும் உப்பை மட்டும் மகாலட்சுமிக்கு இணையாக கருதுகிறோம் அல்லவா. ஆனால் நம் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்கள் அனைத்துமே மங்களகரமான அந்த மகாலட்சுமி அம்சம்தான்.

anjaraipetti

அந்தக் காலங்களில் எல்லாம் அளவில் பெரியதாக இருக்கும் அஞ்சறைப்பெட்டி  பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த அஞ்சறைப்பெட்டியில் மசாலா பொருட்களையும், தானிய பொருட்களையும் குறையாமல் வைத்து பராமரித்து வந்தனர். உப்பை ஜாடியில் எப்படி குறையாமல் வைத்துக் கொள்கிறோமோ அப்படித்தான், வீட்டிலிருக்கும் மற்ற பொருட்களையும் குறையாமல் தீர தீர வாங்கி வைத்துக் கொண்டே இருப்பது நல்லது. எந்த வீட்டில் அஞ்சறைப்பெட்டி நிறைவாக உள்ளதோ, அந்த வீட்டில் மகாலட்சுமியும் நிறைந்து இருப்பாள் என்பது நம் முன்னோர்களின் கூற்று.

அஞ்சறைப் பெட்டியில் கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் இவைகளையெல்லாம் வைப்பார்கள். இவைகளுடன் சேர்த்து நம் வீட்டு பாட்டி சிறிதளவு பணத்தையும் மறைத்து வைப்பார்கள். இந்த அஞ்சறைப்பெட்டியில் பணத்தை சேர்க்கும் வழக்கம் என்பது நேற்றோ இன்றோ தொடங்கப்படவில்லை. அஞ்சறைப் பெட்டியை உபயோகப்படுத்திய காலம் தொட்டே இந்த பழக்கம் இருந்துதான் வருகிறது. காலம் காலமாக நம் முன்னோர்கள் அஞ்சறைப் பெட்டியிலும், அரசி சேமிக்கும் பாத்திரத்திலும், தானியம் சேமிக்கும் பாத்திரத்திலும், பணத்தை வைப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டில் சிலுவான காசு எனப்படும் சில்லரை காசை சேர்த்து வைப்பதை சமையல் அறையில்தான். இந்த காசானது தொடர்ந்து அவர்களுக்கு சேர்ந்துகொண்டே இருக்கும்.

anjaraipetti

அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள பெண்களிடம் சிலரை காசு வேண்டும் என்று கேட்டால் போதும்! இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். சமையலறைக்குச் சென்று அந்த டப்பாவில் இருந்து கொஞ்சம், இந்த டப்பாவில் இருந்து என்று எவ்வளவு கேட்டாலும் எடுத்து கொடுத்திருப்பார்கள். இன்றளவும் கூட சில பெண்கள் இதை கடைபிடித்து தான் வருகிறார்கள். அஞ்சறை பெட்டியின் அடியில் யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைக்கப்படும் காசு தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் அஞ்சறைப்பெட்டி மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது. வாசனை மிகுந்த பொருட்கள் இருக்கும் அந்த இடத்தில் மகாலட்சுமி என்றும் வாசம் செய்து கொண்டிருப்பாள்.

- Advertisement -

anjaraipetti2

பட்டை, லவங்கம், ஏலக்காய் இப்படி வாசனைப் பொருட்களுக்கு என்று தனியாக ஒரு மசாலா பெட்டி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட மசாலா பெட்டியில் பணம் சேர்த்து வைப்பது மிகவும் நல்லது. நம் வீட்டில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியில் எக்காரணத்தைக் கொண்டும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்காதீர்கள். அது ஹேர்பின், பின்னோக்கு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தி, கத்திரிக்கோல், இவைகள் எதுவாக இருந்தாலும் சரி அதை அஞ்சரை பெட்டிக்கு கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. இதுபோல் சிலர் அஞ்சரை பெட்டியினுள் மாத்திரையை வைத்திருப்பார்கள் அதிவும் தவறுதான். விசேஷ நாட்கள் வரும்போது இந்த அஞ்சறைப் பெட்டியுடன் உப்பு ஜாடியையும் சேர்த்து சுத்தம் செய்து வைப்பதும் ஒரு நல்ல பழக்கம். அஞ்சறைப்பெட்டி உப்பு ஜாடி இவைகளை அசுத்தமாக வைத்துக் கொள்ளக்கூடாது.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள். அள்ள அள்ள குறையாமல் பணம் சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Anjarai petti ragasiyam Tamil. Anjarai petti secrets in Tamil. Anjarai petti savings Tamil. Keeping money in anjarai petti.