ரொம்ப ஈஸியா, ரொம்ப சுவையா சேனைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சு பாருங்க. இதனுடைய ருசி நாக்கை விட்டு ஒரு வாரம் ஆனாலும் போகாது.

seenai
- Advertisement -

இந்த சேனைக்கிழங்கு வருவலை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் கழித்து யோசித்துப் பார்த்தாலும் அந்த ருசி நம் நாவில் வந்து நிற்கும். அந்த அளவிற்கு சுவையான வித்தியாசமான ஒரு சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரதம் சாதம் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள இந்த சேனைக்கிழங்கு வறுவல் அருமையாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாம் தெரிந்து கொள்வோம்.

முதலில் 1/4 கிலோ அளவு சேனைக்கிழங்கை எடுத்து மேலே தோலை சீவி விட்டு, கியூப் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டாம். ரொம்பவும் பெரிய துண்டுகள் ஆகவும் வெட்ட வேண்டாம். மீடியம் சைஸில் வெட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெட்டிய இந்த துண்டுகளை நன்றாக கழுவி விட்டு குக்கரில் போட்டு இது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, தேவையான  உப்பு போட்டு ஒரே ஒரு விசில் விட்டு கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கிழங்கு கொழகொழவென வேகக் கூடாது. சரியான பக்குவத்திற்கு வெந்திருக்க வேண்டும். (90% சேனைக்கிழங்கு வெந்து இருந்தால் சரியாக இருக்கும்.) வேகவைத்த கிழங்கை தண்ணீரை வடிகட்டி விட்டு கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வறுவல் செய்ய ஒரு ஸ்பெஷலான மசாலா பொடி அரைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு – பல் 10, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. ரொம்பவும் நைஸ் ஆகவும் இதை அரைத்து விடக்கூடாது. அரைத்த இந்த பொடியும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி போட்டு, ஒரு சிட்டிகை மட்டும் உப்பு போட்டு, இந்த மசாலாவை ஒரு நிமிடம் போல எண்ணெயில் வதக்கி விட்டு, அதன் பின்பு வேக வைத்து இருக்கும் சேனைக்கிழங்கை கடாயில் இருக்கும் மசாலாவோடு போட்டு நன்றாக பிரட்டி விடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வறுக்க வேண்டும். 8 லிருந்து 10 நிமிடங்கள் இந்த வருவல் மொறு மொறுவென வரும் வரை விட்டுவிட்டு கரண்டியால் கலந்து கொண்டே இருங்கள். அவ்வளவு தான். இறுதியாக எண்ணொய் பிரிந்து சூப்பரான வாசத்தோடு ஒரு வறுவல் தயாராகி இருக்கும். சுட சுட எடுத்து ருசித்துப் பாருங்கள். அத்தனை ருசி.

வேகவைக்கும் போதே சேனைக்கிழங்குக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளலாம். சேனைக்கிழங்கை சுவைத்து பாருங்கள். உப்பு கம்மியாக இருந்தால் வறுக்கும் போது லேசாக தூள் உப்பு தூவி கூட கலந்து விட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -