வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

seenai-varuval
- Advertisement -

சுவையான சேனைக்கிழங்கு வறுவலை சுலபமாக வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாமா? ஆமாங்க! சேனைக்கிழங்கை தோல் சீவி க்யூப் வடிவத்தில் ஓரளவுக்கு பொடியாக வெட்டி தண்ணீரில் போட்டு வைத்துவிட்டால் போதும். அதன் பின்பு அந்த சேனைக் கிழங்கை வேகவைத்து வறுப்பதற்கு சரியாகப் பத்து நிமிடங்களே போதும். மசாலா வாசனை நிறைந்த வித்தியாசமான சேனைக்கிழங்கு வறுவல் ரெசிப்பி உங்களுக்காக.

chenai

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் பத்தை – 2, பட்டை – 1, லவங்கம் – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1, சிறிய துண்டு – இஞ்சி, பூண்டு பல் – 2, மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றக் கூடாது.

- Advertisement -

1/4 கிலோ அளவு சேனைக் கிழங்கை எடுத்து தோல் சீவி உங்களுக்கு தேவையான அளவு சிறியதாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

seenai-varuval2

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை தாளித்து வெட்டி வைத்திருக்கும் சேனைகிழங்கை எண்ணெயில் போட்டு, 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சேனைக்கிழங்கை மூடி போட்டு வேக வையுங்கள்.

- Advertisement -

சேனைக்கிழங்கு வெந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேனை கிழங்கோடு சேர்த்து நன்றாக பிரட்டி பரிமாறினால் சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் தயார். ரொம்ப ரொம்ப ஈஸி தானே ட்ரை பண்ணி பாருங்க.

எல்லா வருவல் வகைகளிலும் மசாலா பொருட்கள் ஒட்டி பிடிக்க ஒரு சின்ன டிப்ஸை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீன் வறுவல், வாழைக்காய் வறுவல், கருனை கிழங்கு வருவல், சிக்கன் மட்டன் ஃப்ரை, இப்படி எந்த வறுவல் செய்தாலும் சரி, அதன் மேலே மசாலா பொருட்களை தடவி ஊற வைப்பீர்கள் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு மீன் மேலே மசாலா தடவி வறுவல் செய்வதற்காக ஊறவைத்து இருக்கிறீர்கள். இந்த மசாலா தடவிய மீனை அப்படியே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் 1/2 மணி நேரம் வைத்து விட்டு அதன் பின்பு அதை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து பாருங்கள். மசாலா உதிராமல் பக்காவாக வரும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -