ஒரு செங்கல் வாங்க பணம் இருந்தால் கூட, ஒரு வீட்டையே கட்டி முடித்து விடலாம்!

sondha-veedu

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை, நம்மில் பல பேருக்கு கனவாகத்தான் இருந்து வருகிறது. நம்முடைய வாழ்நாளில் இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது? அதிகப்படியான செலவு செய்து எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம். சுலபமான முறையில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நிலம் வைத்திருப்பவர்கள் சீக்கிரமே வீடு கட்ட ஆரம்பித்து விடுவீர்கள்! வீடு கட்டுவதற்கு சொந்த நிலம், இல்லாதவர்கள், நிலம் வாங்குவதற்கு தேவையான பணத்தை சேர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்!

house with cars

சொந்த வீடு கட்ட முடியவில்லையே! என்ற ஏக்கம் கொண்டவர்களுக்கான பரிகாரம், உங்களுக்காக இதோ! பூமிகாரகன் என்று சொல்லுவது அங்காரகனை தான். செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகனை, செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் வழிபடவேண்டும். முறையாக வழிபட வேண்டும். அது எப்படி? காசு கொடுத்து ஒரு உடையாத செங்கல்லை உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இனாமாக யாரிடமிருந்தும் செங்கல்லை பெறக்கூடாது. காசு கொடுத்து வாங்கிய அந்த செங்கலை, நன்றாக கழுவிவிட்டு, மஞ்சள் தடவி, குங்குமம் பொட்டு வைத்து, உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அந்த செங்கல்லின் மேல், ஒரு மண் அகல் தீபம் வைத்து, நெய் ஊற்றி, பூவைத்து, தீபம் ஏற்ற வேண்டும். விரைவாக வீடு கட்ட வேண்டும் என்று அங்காரகனையும், முருகப்பெருமானையும் மனதார வேண்டிக்கொண்டு இந்த பரிகாரத்தை 27 செவ்வாய்க்கிழமை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே செய்ய வேண்டும்.

house

உங்கள் வீட்டு அருகில், முருகன் சன்னிதானம் உள்ள கோவில் இருந்தாலும் சரி. நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவில் இருந்தாலும் சரி. முருகப் பெருமானையும், செவ்வாய் பகவானையும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று, தரிசனம் செய்து, வீடு கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வர வேண்டும். உங்களால் முடிந்தால் முருகப்பெருமானுக்கு ஒரு செவ்வாய்க்கிழமை பாலபிஷேகம் செய்து வைக்கலாம்.

- Advertisement -

பரத்வாஜ முனிவருக்கு மகனாக பிறந்து, பூமாதேவி தாயாரால், வளர்க்கப்பட்டவர் ‘அங்ககாரகன்’. இவரைத்தான் நாம் ‘அங்காரகன்’ என்ற பெயரில் வழிபட்டு வருகின்றோம். பூமித்தாயால் வளர்க்கப்பட்ட, அந்த அங்காரகனை மனதார வழிபடும்போது, நிலம் வாங்குவதில், வீடுகட்டுவதில், நமக்கு ஏதேனும் தோஷம் இருந்தால் கூட அது நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

deepam

இது ஒரு சுலபமான பரிகாரம் தான். 27 வாரங்கள் செவ்வாய்க்கிழமை இந்த பூஜையை நீங்கள் முழுமையாக நிறைவு செய்து விட்டீர்கள் என்றால், அந்த செங்கலை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீடு கட்டத் தொடங்கிய பின்பு, அந்த செங்கலை கடைகால் போடும்போது சேர்த்துக்கொள்ளலாம். அல்லது வீடு கட்டும்போது அந்த செங்கலை சேர்த்து, வீட்டை கட்டிக் கொள்ளலாம். இப்படியாக அங்காரகனின் ஆசீர்வாதத்தை, முழுமையாக பெறுவதற்கு இது ஒரு சுலபமான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் பூஜை செய்யக் கூடிய இந்த 27 வாரங்களிலும் உங்களது முயற்சியை ஒரு நொடி கூட கை விடக்கூடாது. நிலம் வைத்திருப்பவர் வீடு கட்டுவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். வீடுகட்ட நிலம் இல்லாதவர்கள், நிலம் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இருந்து பின்வாங்கி விடக்கூடாது. உங்களது முயற்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருப்பது தான் இந்த பூஜை. பூஜையை செய்துவிட்டு, நீங்கள் சும்மாவே இருந்தால், தானாக எதுவும் நடந்து விடாது என்ற இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மனபயம், மனக்கவலை, எதிர்மறை எண்ணம் நீங்க, 5 நிமிடம் போதும்! இதோடு சேர்த்து வாழ்நாள் முழுவதும் இளமையான வாழ்க்கையையும் வாழலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pudhu veedu Tamil. Sondha veedu katta Tamil. Veedu katta Pariharam Tamil. Veedu kattum pothu Tamil