செய்வினை மற்றும் தீய பாதிப்புகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

Amman pariharam

சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் மந்திரம் எனப்படும். சித்தர்கள் மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கலையின் சில தீய மந்திரங்கள் மற்றும் சடங்குகளை கொண்டு பிறருக்கு தீமை ஏற்படுத்தும் ஒரு வகை செயல் செய்வினை எனப்படும். இந்த செய்வினை பாதிப்புகள் உள்ளவர்களுக்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kan-thirusti

ஒரு நபருக்கு செய்வினை செய்வதற்கு, அந்த நபரின் ஜாதகத்தை ஆராய்ந்து அதில் அவருக்கு கிரகங்களின் கோட்சாரம் கெட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அதிலும் குறிப்பாக “சந்திரனின்” நிலை கெட்டிருக்கிறதா என்று ஆய்ந்து செய்வினை செய்யப்படுகிறது. எனவே முடிந்த வரை உங்கள் ஜாதகத்தை அறிமுகமில்லாத மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள், தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள் வாரத்தில் ஒருமுறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையாவது திங்கட்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வர செய்வினை ஏதேனும் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவை நீங்கும்.

Sivan

பேய், தீய ஆவிகளின் பாதிப்பு, மாந்திரீக பாதிப்புகள் கொண்டவர்கள் மிக பழமையான சக்திவாய்ந்த நரசிம்மர் கோவில்களான “சோளிங்கர் நரசிம்மர் கோவில், நாமக்கல் நரசிம்மர் கோவில், மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோவில்” ஆகிய ஏதேனும் ஒரு கோவிலுக் சென்று, வியாழக்கிழமையன்று அதிகாலை அக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி, அந்த கோவில்களில் இருக்கும் நரசிம்மரை வழிபட்டு, நரசிம்மர் சந்நிதியின் தீர்த்த நீரை முகத்தில் தெளித்து கொண்டு, அக்கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்து நரசிம்மரை தியானித்து உங்களின் செய்வினை பாதிப்புகள் நீங்க வேண்டும் என வேண்டும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் கெடுதல்களை நீக்கி அருள் புரிவார் நரசிம்மர்.

- Advertisement -

Narasimmar

துஷ்ட சக்திகளை ஒழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் “பிரத்யங்கரா தேவி”. இந்த தேவி கோவிலில் செவ்வாய் அல்லது வியாழனன்று, பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, திரி போட்டு விளக்கேற்றினால் உங்களுக்கு செய்யப்பட்ட செய்வினை மாந்திரீக கட்டு உடையும். வாரமொருமுறை தொடர்ந்து செய்து வர செய்வினை பாதிப்புகள் நீங்கும்.

Prathyangara devi

கடற்கரையிலோ அல்லது ஏதேனும் கோவில் குளத்தின் கரையில் நின்று, ஒரு எலுமிச்சை பழத்தை கைகளுக்குள் வைத்து, உங்களின் தீவினைகள் நீங்க உங்கள் குலதெய்வத்தை வேண்டி, அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த நீர் நிலையில் விட்டெறிந்து, அந்த குளம் அல்லது கடலில் மூழ்கி நீராடி பின்பு உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்க செய்வினை பாதிப்புகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கோயிலிற்கு வேஷ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், பஞ்சாங்க குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Seivinai pariharam in Tamil. It covers Seivinai vasiyam pariharam, Seivinai pilli soonyam and all others. It is also called as Seivinai neenga pariharam or Seivinai kolaru neenga or Seivinai manthrigam neenga pariharam in Tamil.