மார்கழி மாதத்தில் வரக்கூடிய விசேஷமான தேய்பிறை சதுர்த்தியில் இவ்வாறு பூஜை செய்வதன் மூலம் செல்வவளம் பெருகி வரும்

astro pillayar
- Advertisement -

சதுர்த்தி என்றாலே அது விநாயகருக்கு உகந்த தினமாகும். மாதத்தில் இரண்டு முறை இவ்வாறான சதுர்த்தி தினங்கள் வருகின்றன. அமாவாசை முடிந்த நான்காம் நாளன்று வருகின்ற திதி சுக்கில பட்ச சதுர்த்தி என்றும், பவுர்ணமி முடிந்து நான்காம் நாள் வருகின்ற திதி சங்கடஹரசதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாதம் சதுர்த்தி திதி இரண்டு நாட்களுக்கு சேர்ந்து வருகிறது. அவ்வாறு 22 – 12 – 2021 புதன்கிழமை மாலை 04.52 மணிக்கு துவங்கி மறுநாள் 23 – 12 – 2021 வியாழக்கிழமை மாலை 06.27 மணி வரை நீடிக்கிறது. இந்த சதுர்த்தி புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் சேர்ந்து வருவதனால் இன்றைய தினம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இன்றைய திருநாளில் விநாயகருக்கு பூஜை செய்வதன் மூலம் குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் பலனையும் பெற முடிகிறது. வாருங்கள் இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய பூஜை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

amavasai1

மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த சதுர்த்தி எந்தக் கிழமையோடு சேர்ந்து வருகிறதோ அதற்கு ஏற்றார்போல் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது. அவ்வாறு புதன் கிழமை சதுர்த்தா புதிவார சதுர்த்தி என்றும், வியாழக்கிழமை சதுர்த்தி குருவார சதுர்த்தி என்றும், வெள்ளிக்கிழமை சதுர்த்தி சுக்கிர வார சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் பலர் தொடர்ந்து விரதம் இருந்து விநாயகருக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பர். இப்பொழுது வரக்கூடிய சதுர்த்தி இரண்டு நாட்களில் வருவதால் எந்த கிழமை விரதம் இருக்க வேண்டும் என்ற குழப்பம் பெண்களிடமும் இருக்கிறது. புதன்கிழமை மாலை தான் சதுர்த்தி துவங்குகிறது. எனவே வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை விரதம் இருந்து விநாயகரை பூஜிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

viradham

அத்துடன் வியாழக்கிழமை குருபகவானுக்கு குபேரருக்கும் உகந்த தினம் என்பதால் சில சிறப்பு பூஜைகள் செய்வதன் மூலம் விநாயகர், குருபகவான் மற்றும் குபேரர் ஆகிய மூன்று கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று நமது இல்லத்தில் செல்வ வளம் பெருகிடும். செல்வக் கடவுளான குபேரருக்கு விநாயகருக்கும் இடையே ஒரு சமயம் சிரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விநாயகர் குபேரரின் ஆணவத்தை அடக்கி அவரின் தவறை புரிய வைத்திருப்பார்.

- Advertisement -

எனவே இவர்கள் இருவரையும் போற்றும் வகையில் வியாழக்கிழமை வரும் சதுர்த்தி தினத்தில் குபேர பூஜை செய்வதற்கான விசேஷமான நேரத்தில் மாலை 5 லிருந்து 8 மணிக்குள், அதேசமயம் சதுர்த்தி முடிகின்ற நேரமான 6.27 மணிக்குள் இந்த பூஜையை செய்து வழிபட வேண்டும். அதற்காக குபேர பூஜை செய்வதற்காக பயன்படுத்தப்படும் 108 சில்லரை நாணயங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

kuberan

பிறகு அதனை வெற்றிலையின் மீது “ஓம் செல்வ கணபதியே போற்றி” என்று 108 முறை சொல்லிவிட்டு ஒவ்வொரு நாணயத்தையும் வெற்றிலையின் மீது வைத்து விட வேண்டும். பின்னர் குபேரரை தொழுவதற்காக குபேர விளக்கு ஏற்றி எப்பொழுதும் போல வழக்கமான குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விநாயகர் மற்றும் குபேரனின் அருள் கிடைத்து எப்பொழுதும் செல்வவளம் பொங்கி வழியும்.

- Advertisement -