செல்லும் காரியம் வெற்றி அடைய சூட்சும பரிகாரம்

vinayagar thulasi
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு செயலை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வோம். அவ்வாறு செல்லும் அந்த செயல் எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் இது பலருக்கும் வெற்றிகரமாக நடைபெறாது. ஒரு சிலருக்கு மட்டுமே நடைபெறும். மீதம் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு நாளை செல்ல வேண்டும் அல்லது ஒரு வாரம் கழித்து செல்ல வேண்டும் அல்லது அந்த செயலை நடைபெறாமல் நின்று விடுவது இப்படி பல விதங்களில் அந்த காரியம் நடைபெறாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன எளிமையான பரிகாரத்தை நாம் செய்தால் நாம் செல்லும் காரியத்தில் நமக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகள் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்லும் காரியம் நிறைவேற

பொதுவாக செல்லும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் காரிய வெற்றி ஏற்பட வேண்டும் என்றால் நாம் விநாயகர் பெருமானை வழிப்பட்டு விட்டு செல்ல வேண்டும் என்று பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் முழு முதல் கடவுளாக திகழக் கூடியவர். எந்த தெய்வத்தை நாம் வழிபடுவதாக இருந்தாலும் முதலில் நாம் குலதெய்வத்தை வழிபட்டு விட்டு இரண்டாவதாக விநாயகரை வழிபட வேண்டும். பிறகுதான் நாம் வழிபட வேண்டிய தெய்வத்தை நினைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

ஆனால் இந்த பதிவில் நாம் எந்த வித தெய்வத்தையும் வழிபட போவது கிடையாது. ஒரு பொருளை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். அவ்வளவுதான். மிகவும் இனிமையான இந்த பரிகாரம் பலரும் அனுபவபூர்வமாக செய்து பலன் அளிந்த பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது.

எப்பொழுதும் போல் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்வோம் அல்லவா? அவ்வாறு வெளியே செல்வதற்கு முன்பாக அதாவது நிலை வாசலை தாண்டுவதற்கு முன்பாக இரண்டே இரண்டு துளசி இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று முழுங்கி விட்டு பிறகுதான் தலை வாசலை தாண்டி செல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் செல்லும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் உண்டாகும்.

- Advertisement -

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் நாம் பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து இலையை பறிக்கக்கூடாது. அது தெய்வமாக கருதப்படுவதால் அந்த தெய்வத்தை நாம் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாது. இதை தவிர்த்து தனியாக ஒரு துளசி செடியை வைத்திருந்து அதில் இருந்து இலையைப் பறித்து சாப்பிட வேண்டும். வீட்டில் ஒரே ஒரு துளசி செடிக்கு மட்டும்தான் பூஜை செய்ய வேண்டும். அந்த துளசி செடிக்கு பூஜை செய்வதை தவிர்த்து வேறு எதுவும் செய்யக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றபடி மருத்துவர் ரீதியாகவும் மருந்தாகவோ அல்லது பூஜை அறையில் தீர்த்தத்தில் போடுவதற்காகவோ அல்லது அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவோ துளசி வேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக வேறொரு தொட்டியில் துளசி செடியை வாங்கி வைத்து வளர்க்க வேண்டும். இந்த துளசி செடியில் இருந்து தான் இலையைப் பறித்து நாம் வாயில் நின்று பிறகு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க பாலாடை தீபம்

மருத்துவ ரீதியாக பல நன்மைகளை தரக்கூடிய இந்த துளசி இலையை நாம் உட்கொண்டு செல்ல நம் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -