- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் தரும் பிள்ளையார் விளக்கு

செல்வ வளம் தரும் பிள்ளையார் விளக்கு

- Advertisement -

முழு முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி வழிபாடு இன்று விமர்சியாக கொண்டாடப்படவிருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு செல்வ வளத்தை நீங்கள் ஈர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தியை நீங்கள் விமர்சியாக கொண்டாட வேண்டும். அதற்காக செலவுக்கு பணத்தை கடன் வாங்கி, விநாயகருக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப, எந்த அளவுக்கு சிறப்பாக விநாயகரை வழிபாடு செய்ய முடியுமோ, எந்த அளவுக்கு இனிப்பு பலகாரங்களை வாங்கி வைத்து வழிபாடு செய்ய முடியுமோ, அதை மனநிறையோடு செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை அந்த விநாயகர் உங்களுக்கு கொடுப்பார். இந்த விநாயகர் சதுர்த்தி அன்று பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விளக்கை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய விளக்கு

உங்களுடைய வீட்டில் வழக்கம் போல நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கு குத்துவிளக்கு எல்லாம் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றங்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மண் பிள்ளையாருக்கு முன்பாக ஒரே ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி அதில் 2 ஏலக்காய், 2 கிராம்பு போட்டு பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விக்னங்களை தீர்க்கும் விநாயகா, எனக்கு செல்வ வளத்தை கொடு என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கூடவே ஒரே ஒரு சிவப்பு நிற ஒற்றை நாட்டு செம்பருத்தி பூவை வைத்து விடுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. இதோடு சேர்த்து நீங்கள் செய்த கொழுக்கட்டை சுண்டல் அவல்பொரி கடலை, பொரி உருண்டை எல்லாம் வைத்து நெய்வேத்தியமாக பிள்ளையாரை கும்பிட்டுக் கொள்ளலாம். பிள்ளையாருக்கு தெரிந்த பாடலை குடும்பத்தோடு அமர்ந்து பாடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் படிக்கின்ற குழந்தைகளின் கையால் மஞ்சள் நிற பூக்களை கொடுத்து பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இன்று குழந்தைகள் கையால் பிள்ளையாருக்கு மஞ்சள் நிற பூவை சாத்தினால் அவர்களுடைய கல்வித்தடை விளக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்ச்சி பெறாத பிள்ளைகள் கூட, படிப்பில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

மண் பிள்ளையார் வாங்கி வைத்து வழிபாடு செய்பவர்கள் வீட்டில், மூன்று நாள் அந்த பிள்ளையார் இருப்பார். இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிள்ளையாருக்கு நெய் விளக்கு ஏற்றினாலும் நிச்சயம் உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரும். இன்று விநாயகர் சதுர்த்தி, நீங்கள் விநாயகரை வாங்கி இருந்தால் சனி ஞாயிறு திங்கள் 3 நாள் உங்கள் வீட்டில் பிள்ளையார் இருப்பார்.

இதையும் படிக்கலாமே: தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ விநாயகர் சதுர்த்தி பரிகாரம்

இன்றைய தினம் இந்த வழிபாட்டை உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும், நாளைய தினமும் அல்லது அதற்கு மறுநாள் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்தாலும் நிச்சயம் பலன் உண்டு. அனைவருக்கும் விநாயகரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்தனை வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்