- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்தை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

செல்வ வளத்தை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதிலும் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியை நாம் சித்ரா பௌர்ணமி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் தான் சித்ரகுப்தர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் செல்வ வளம் பெருக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சித்ரா பௌர்ணமி வழிபாடு

சித்ரா பௌர்ணமி என்பது மே மாதம் 11ம் தேதி இரவு 8:48 மணிக்கு ஆரம்பித்து மே மாதம் 12ஆம் தேதி இரவு 10:44 வரை இருக்கிறது. அதனால் இரவு பௌர்ணமி என்பது ஞாயிற்றுக்கிழமை அன்று தான் வருகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவில் செல்வதுதான் மிகவும் உத்தமம். அப்படிப்பட்ட நாளில் நாம் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இரவு பௌர்ணமியாக திகழக்கூடிய மே மாதம் 11-ம் தேதி பௌர்ணமி ஆரம்பித்த பிறகு அதாவது முழு நிலவு வானில் தோன்றிய பிறகு இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். முதலில் சந்திர பகவானை வெட்டவெளிக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். பிறகு “ஓம் சோமாய நமஹ” என்னும் சந்திர பகவானின் மந்திரத்தை 108 முறை கூறிவிட்டு காய்ச்சாத பசும்பாலை சந்திர பகவானுக்கு மூன்று முறை அக்கியம் தர வேண்டும். எப்படி சூரிய பகவானுக்கு தண்ணீரை ஊற்றி வழிபாடு செய்கிறோமோ அதே போல் சந்திர பகவானுக்கு காய்ச்சாத பசும்பாலை ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தீபங்களையும் ஏற்றி வைத்துவிட்டு ஒரு பெரிய அகல் விளக்கை வைத்து அந்த அகல்விளக்கில் சிறிது கற்பூரத்தை போட்டு ஏற்றி கொள்ளுங்கள். ஒரு புறம் 22 எண்ணிக்கையில் மல்லிகை பூவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமான பசு நெய்யை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எரிகின்ற அந்த கற்பூரத்திற்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு மல்லிகை பூவை ஒவ்வொன்றாக எடுத்து நெய்யில் முக்கி எரிகின்ற அந்த கற்பூரத்தில் போட்டு விட வேண்டும். அவ்வாறு போடும்பொழுது பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும். கிட்டத்தட்ட இது யாகம் வளர்த்ததற்குரிய பலனை தரும் என்றே கூறலாம்.

- Advertisement -

மல்லிகை பூவை கற்பூரத்தில் போடும் பொழுது “ஓம் காமதாயகாய நமஹ” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை 11 முறை கூறி 11 மல்லிகை பூக்களை கற்பூரத்தில் போட்டு செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மறுபடியும் 11 முறை இந்த மந்திரத்தை கூறி 11 மல்லிகை பூக்களை நெய்யில் முக்கி ஒவ்வொன்றாக போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கஷ்டமான சூழ்நிலையும் நல்ல விதத்தில் மாறி செல்வ செழிப்பு உயரும்.

இதோடு மட்டுமல்லாமல் மே மாதம் 12ஆம் தேதி சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சூரிய உதயம் ஆகும் பொழுது கிழக்குப் பார்த்தவாறு நின்று கொண்டு இந்திர பகவானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். “ஓம் இந்திராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடு செய்வதன் மூலம் இந்திர பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இந்திர பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான சுகபோகங்களை அனுபவிப்பதற்குரிய நிலை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் யார் ஒருவர் சித்ரா பௌர்ணமி நாளன்று கூறுகிறார்களோ அவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்த வித குறையும் இருக்காது, நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்