செல்வம் பெருக கிரிவல சூட்சமம்

siva lingam girivalam
- Advertisement -

பௌர்ணமி என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது கிரிவலம் தான். எந்த கோயிலாக இருந்தாலும் அந்த கோவில் மலை பாங்கான இடத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த மலையை சுற்றி வருவது தான் கிரிவலம் என்று கூறுவோம். அதுவும் குறிப்பாக பௌர்ணமி தினங்களில் தான் இந்த கிரிவலத்தை மேற்கொள்வார்கள். பௌர்ணமி தினத்தன்று இந்த பிரபஞ்சத்தின் சக்தி என்பது அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கிரிவலம் வருவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இதில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது திருவண்ணாமலை. எந்த கோவிலுக்கு கிரிவலம் செல்வதாக இருந்தாலும் உங்களுடைய செல்வ வளம் பெருகுவதற்கு செய்ய வேண்டிய ஒரு சூட்சும பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பௌர்ணமி என்றாலே அம்மன் ஆலயங்களிலும் சிவபெருமான் ஆலயங்களிலும் மிகவும் விசேஷமாக பூஜை, வழிப்பாட்டு முறைகள் நடைபெறும். இதோடு மட்டுமல்லாமல் மலைப்பாங்கான கோவில்களில் கிரிவலம் வரும் பழக்கமும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் விசேஷகரமாக திகழக்கூடிய ஒன்று. மகாலட்சுமிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று நாம் எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்வில் செல்வ வளம் பெருகும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்வ வளம் பெருக கிரிவல சூட்சமம்

பொதுவாக பலரும் பௌர்ணமி தினத்தன்று அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு செல்வார்கள் அல்லது இரவு நேரத்தில் கிரிவலம் செல்வார்கள். இதில் குறிப்பாக திருவண்ணாமலை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வாறு நீங்கள் கிரிவலம் செல்வதற்கு முன்பாக வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது ஒரு சிறிய பேப்பரையோ அல்லது கவரையோ எடுத்து அதில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மஞ்சள் தூளை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். சிறிதளவு இருந்தால் கூட போதும்.

இதை அப்படியே மடித்து உங்களுடைய சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் வீட்டை விட்டு கிளம்பி கிரிவலம் செல்லலாம். கிரிவலம் முழுவதும் சென்று முடித்த பிறகு வீட்டிற்கு வந்து அந்த மஞ்சளை எடுத்து மறுபடியும் உங்கள் வீட்டில் இருக்கும் மஞ்சளுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் செல்வ வளம் நமக்கு பெருகும்.

- Advertisement -

கிரிவலம் செல்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம், கிரிவலம் செல்லாதவர்கள் அல்லது செல்ல இயலாதவர்கள் எப்படி செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டின் மையப் பகுதியில் ஒரு ஸ்டூலை போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கம் நந்தி இருவரையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு முகமாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி சிவலிங்கம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படம் இருந்தால் அந்த படத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம். பிறகு உங்கள் கையில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மஞ்சள் துறை எடுத்துக்கொண்டு சிவபெருமானை 11 முறை வலம் வர வேண்டும். இப்படி வளம் வந்த பிறகு அந்த மஞ்சளை மறுபடியும் திருப்பி உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மஞ்சள் உடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலமும் செல்வ வளம் உயரும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக பெண்கள் செய்ய வேண்டிய பூஜை

கிரிவலம் செல்பவர்களாக இருந்தாலும் கிரிவலம் செல்லாதவர்களாக இருந்தாலும் பௌர்ணமி தினத்தன்று இந்த முறையில் சிவபெருமானை வலம் வர உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -