சகல செல்வங்களும் கிடைக்க சொல்ல வேண்டிய கனகதாரா ஸ்தோத்திரம்! இந்த மந்திரத்தை உச்சரித்தால் அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் விரைவில் கிடைக்குமாம்!

mahalakshmi-selvam-gold-coins

இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்க தான் இறைவன் விரும்புகிறார். ஆனால் அவரவர்களின் புத்திக்கு ஏற்ப இன்பமும், துன்பமும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்கிறீர்கள்! என்பதை ஒரு பொழுதும் மறக்கக் கூடாது. மந்திர ஜெபம் என்பது இறைவனை சரண் அடைய கூடிய ஒரு பாதையாக இருக்கிறது. இதில் இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் பொழுது அனைத்து வகையான செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அது என்ன மந்திரம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mahalakshmi

கனகதாரா ஸ்தோத்திரம்:
அங்கம் ஹரே:புனகபூஷன – மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம் – தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி – ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம: மங்கல – தேவதாயா!

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியின் படத்திற்கு பாலுடன் கற்கண்டு கலந்து நிவேதனம் வைத்து 108 முறை உச்சரித்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. இந்த மந்திரத்திற்கு எல்லா வகையான செல்வத்தையும், எல்லாருக்கும் கொடுக்கும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது.

mahalakshmi

கனகதாரா ஸ்தோத்திரம் செல்வத்திற்குரிய மகாலட்சுமியை துதிப்பதாக அமைந்துள்ளது. இப்பாடலின் பொருள் அனைத்து மக்களுக்கும், அனைத்து செல்வங்களையும் வாரி வழங்குமாறு வேண்டி வணங்குவது போல அமைந்திருக்கும். நான், எனக்கு என்று கேட்க்கும் பொழுது எதுமே கிடைப்பது இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டி மந்திரங்களை சொன்னால் எல்லாமே தானாகவே கிடைக்கும்.

மரம் முழுக்க மொட்டுக்கள் நிறைந்து அதை சுற்றி வரும் பொன்வண்டு போல காட்சி தரும், ஸ்ரீமன் நாராயணனின் அழகிய மார்பை மஹாலக்ஷ்மி தாயார் மெய் மறந்து கண்டு கொண்டிருக்கும் அழகிய அருள் விழிகள் எல்லா மக்களுக்கும் எல்லா செல்வங்களையும் கொடுக்குமாறு வணங்குகிறேன் என்பது இப்பாடலின் பொருளாகும்.

mahalakshmi

எவரொருவர் இந்தப் பாடலை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் உச்சரித்து வருகிறார்களோ! அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். எந்த ஒரு விஷயத்தையும் உரியவர்களிடம் வேண்டி வணங்கி கேட்கும் பொழுது தான் கிடைக்கும். அழுத பிள்ளைக்கு பால் கிடைப்பது போல, தாயிடம் வேண்டி வணங்கும் பொழுது தான் அத்துணை செல்வங்களும் நமக்கு கிடைக்கும். எனவே வெள்ளி தோறும் தவறாமல் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து அனைவரும் பலன் பெறலாமே!