வீட்டில் செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் இதோ

astrology

இன்றைய உலகத்தில் பணத்திற்கு இருக்கும் மதிப்பு, நீதி, நேர்மை போன்ற உயரிய குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கு இல்லை எனபதே உண்மை. எனவே அப்படியான பணத்தை ஈட்டுவதற்கு மக்கள் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு என்ன தான் அவர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், ஒரு வழியில் வரும் பணம் வேறொரு வழியில் செலவாகிறது. அப்படி ஈட்டப்படும் செல்வம் வீண் விரையமாகாமலும், மேலும் செல்வச் சேர்க்கை உண்டாகவும் 12 ராசியினருக்கும் சில பரிகார முறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. அதை மேற்கொண்டு தங்கள் வாழ்வில் செல்வ வளம் பெறுக எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

மேஷம்
Mesham Rasiமேஷ ராசியினரே, நீங்கள் உங்கள் வேலை அல்லது தொழில் நிமித்தமாக வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு சிட்டிகை வெல்லத்தை எடுத்து, உங்கள் வீட்டின் தென் பகுதியில் வைத்து விட்டு செல்ல அன்றைய தினம் உங்கள் தொழிலும், வியாபாரமும் நல்ல முறையில் நடந்து உங்களுக்கு நல்ல பொருட்சேர்க்கையுண்டாகும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் சிவபெருமானுக்கு கடலைப்பருப்பை நிவேதனமாக வைத்து, அவரை வழிபட வேண்டும்.

ரிஷபம்
Rishabam Rasiநீங்கள் தினமும் காலையில் ஒரு பசுமாட்டிற்கு அகத்திக்கீரையையோ அல்லது வாழைப்பழங்களையோ கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உங்கள் வாழ்நாள் முழுதும் அதை தொடர்ந்து செய்தீர்கள் என்றால், அந்த பசுவின் உடலில் தங்கியிருக்கும் தேவர்களின் ஆசிகளை பெற்று உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் பெறுவீர்கள்.

மிதுனம்
midhunamநீங்கள் உங்கள் வாழ்வில் நல்ல செல்வ நிலையை பெற ஒவ்வொரு புதன் கிழமையன்றும் புதன் பகவானுக்கு பச்சை பயிரை நிவேதனமாக வைத்து அவரை வழிபட வேண்டும். மேலும் உங்களால் முடிந்தால் புதிதாக திருமணமான ஏழை சுமங்கலிப்பெண்களுக்கு வளையல்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, புது சேலை போன்ற சீர்வரிசை பொருட்களை தானமாக கொடுக்க, உங்கள் வாழ்நாளில் எப்போதும் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படாது.

கடகம்
Kadagam Rasiகடக ராசியினர் தங்கள் பொருளாதார நிலை மேம்பட ஒவ்வொரு திங்களன்றும் கோவிலில் சிவலிங்க அபிஷேகத்திற்கு சுத்தமான பசுப்பாலை தானமாக அளிக்கவேண்டும். மேலும் புறாக்கள், குருவிகள் மற்றும் ஏனைய பறவைகள் உண்ண உணவும், குடிக்க குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர, உங்களின் வாழ்வில் இருக்கும் தரித்தரம் அந்த பறவைகளின் ரூபத்திலிருக்கும் இறைவனின் ஆசியால் நீங்கும்.

சிம்மம்
simmamஉங்களின் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட தினமும் நீங்கள் தூங்கப் செல்லும் முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றிவையுங்கள். மறுநாள் காலை எழுந்து, அந்நீரை உங்கள் வீட்டின் கிழக்கு பகுதியில் தெளித்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் நுழைவதற்கு இருந்த சூட்சமத் தடைகள் நீங்கும். இதை தொடர்ந்து செய்து வர, உங்கள் பொருளாதார நிலை உயரும்.

- Advertisement -

கன்னி
Kanni Rasiகன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு உண்டாக மாதத்திற்கு ஒரு முறை புதன் கிழமைகளில் ஏதாவது நெல், கோதுமை போன்ற தானியங்கள், வெல்லம் ஆகியவற்றை ஒரு திருநங்கைக்கோ அல்லது ஒரு பிச்சைக்காரருக்கோ தானம் அளிக்கவேண்டும். மேலும் புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். எப்போதும் ஒரு பச்சை நிற கைகுட்டையாவது வைத்திருக்க வேண்டும்.

துலாம்
Thulam Rasiதுலாம் ராசியினர் தங்கள் வாழ்வில் பொருளாதாரத்தில் உச்ச நிலையடைய வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலும், ஒரு படி அரிசியையும் தானமாக வழங்கவேண்டும். மேலும் ஏழைக்குழந்தைகள் அருந்துவதற்கும் பாலை தானம் அளிக்க, அந்த சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் எவ்வித கஷ்டங்களும் ஏற்படாது.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசியினர் தங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு உண்டாக ஒரு சிகப்பு துணியில் சிறிது பார்லி அரிசியை வைத்து முடிந்து உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் யாரும் பார்க்காத படி வைத்து விட வேண்டும். இது உங்கள் வீட்டிலிருக்கும் தீய அதிர்வுகளை நீக்கும். மேலும் செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில் சென்று, அக்கோவிலில் கடலைப்பருப்பு நிவேதனமாக வைத்து வழிபட வேண்டும்.

தனுசு
Dhanusu Rasiநீங்கள் உங்கள் வாழ்வில் நிறைய பொருட்செல்வம் பெறுவதற்கு உங்கள் வீட்டின் பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர, உங்கள் வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி உங்களிடமும் உங்கள் வீட்டிலும் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். மேலும் எப்போதும் ஒரு மஞ்சள் நிற கைக்குட்டை உங்களிடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

மகரம்
Magaram rasiமகர ராசியினர் தங்கள் வாழ்வின் பொருளாதார நிலை மேம்பட வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் துளசி மாடத்திலுள்ள துளசி செடிக்கு தூபங்கள் காட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பூஜைகள் செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை அன்று உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடைகளை தானமாக அளிக்க வேண்டும்.

கும்பம்
Kumbam Rasiஉங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான செல்வ வளங்களை பெற, உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, எண்ணையினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரத்தைக் படையலிட்டு சனி பகவானை வழிபட வேண்டும்.

மீனம்
meenamமீன ராசியினர் தங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட வியாழக்கிழமைகளில் ஸ்ரீ குரு பகவானை வழிபட வேண்டும். மேலும் அவ்வியாழக்கிழமைக்குரிய குரு பகவானின் அருளை பெற, அன்றைய தினம் மஞ்சளையும், இனிப்பான லட்டுகளையும் அவருக்கு நிவேதனமாக அளித்திட வேண்டும். இந்த வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.