உங்கள் வீட்டில் செல்வம் சேராமல் இருக்க இவைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

lakshmi-plant

இன்றைக்கு ஒருவருடைய வீட்டில் செல்வமானது சேராமல் இருந்தால், அதற்கான காரணத்தைத் தேடிப் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஏனென்றால், நம்முடைய நடைமுறை வாழ்க்கை எல்லாமே மாறிவிட்டது. முன்னோர்கள் சொன்ன வழியில் இருந்து திரும்பி, மாறுபட்டு எங்கெங்கேயோ சென்று விட்டோம். நம்முடைய வாழ்க்கையில் எதை கடைபிடிப்பது? எதை கடைபிடிக்க கூடாது? யார் சொல்வதைக் கேட்பது? யார் சொல்வதை கேட்க கூடாது? என்ற குழப்பத்திலேயே, இதை செய்யலாமா! அதை செய்யலாமா! என்ற தடுமாற்றம் நமக்கு இருந்துதான் வருகிறது.

Today Gold rate

இருப்பினும் நாம் படிப்பது, கேட்பது இவைகளை வைத்து தான் நம்முடைய வாழ்க்கை முறைகளை வாழ வேண்டியதாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கும்போது நம் மனதிற்கு எந்த ஒரு எண்ணமும் தோன்றாது. எந்த பரிகாரத்தையும் நம்ம வேண்டுமென்ற என்னமும் நம்முடைய மனதிற்கு வரவே வராது. அதுவே, ஒருவருக்கு கஷ்டம் வந்து விட்டது என்றால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகப்பட வைத்துவிடும். இதை சரியாக செய்கிறோமோ! அதைச் சரியாகச் செய்கிறோமா! என்ற சந்தேகம் நம்மை வாட்டி வதைக்கும்.

முதலில் எந்த ஒரு செயல்பாட்டை செய்வதற்கு முன்பாகவும் மனக் குழப்பம் இல்லாமல் ‘நான் செய்வது சரிதான்’ என்ற நம்பிக்கையோடு செய்தாலே போதும். வாழ்க்கையில் இருக்கும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். அந்த வரிசையில் இன்று நம் வீட்டில் செல்வம் சேராமல் இருக்க இதுகூட காரணமாக இருக்கலாம் என்று, நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன காரணம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இந்த தவறுகளை எல்லாம் உங்கள் வீட்டில் செய்தீர்கள் என்றால், இனி வரும் காலகட்டத்தில் திருத்திக் கொள்ளலாமா, என்று சிந்தித்து பார்த்து அதன் பின்பு திருத்திக் கொள்ளுங்கள். அது அவரவர் இஷ்டம். ஆனால் இந்த குறிப்புகள் எல்லாம் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

watering-rose-plant

பொதுவாகவே நம் வீட்டிலிருக்கும் எந்த செடிகளாக இருந்தாலும், அந்த செடிகளுக்கு சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு தண்ணீர் ஊற்றக்கூடாது. அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு, அதிலும் குறிப்பாக துளசி செடிக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்துவிட வேண்டும். முடிந்தவரை 4 மணிக்கே துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். மாலை  நேரத்தில் துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் வறுமை ஏற்படும் என்று முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இரண்டாவதாக மாலை நேரத்தில் கோவில்களுக்கு செல்லும் சமயத்தில், அதுவும் தலவிருட்சம் இருக்கும் கோவிலுக்கு சென்றால், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு, மாலை 6 மணிக்குப் பின்பு, கட்டாயம் அந்த விருட்சத்தை வலம் வரக்கூடாது. கோவில் மரமாக இருந்தாலும், மாலை 6 மணிக்கு மேல் அந்த மரத்தை வலம் வந்தால் நம் வீட்டில் வறுமை ஏற்படும் என்று சொல்கிறது சாஸ்திரம். இதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டில் செடி கொடிகள் வாடி இருந்தால், அதை முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும். உங்கள் வீட்டு வாசலில் முன் பக்கத்தில் உள்ள வாடிய செடிகளை நீங்கள் தினந்தோறும் பார்த்து வந்தீர்கள் என்றால், அது உங்களுடைய அதிர்ஷ்டத்தை குறைக்கும். முக வசீகரத்தை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்களாக இருந்தாலும், வாடிய செடிகளை பார்க்கும் போது உங்களின் அதிர்ஷ்டம் படிப்படியாக குறையக் கூடும் என்பது உண்மை.

உங்களுடைய வீட்டின் பின்பக்கத்தில் வாடிய செடிகள் இருந்தால், அதன் மூலம் துர்தேவதைகளின் ஆட்சி உங்கள் வீட்டில் நடக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டில் தேவையில்லாத பிரச்சனை, சண்டை, குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

plant

உங்களுடைய மொட்டைமாடியில் வாடிய பூச்செடிகளும், கொடிகளும் இருந்தால், கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கும் உங்களுடைய குழந்தைகளுக்கு நல்லது நடக்க தாமதம் ஏற்படும். அதாவது பெரிய வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு திருமணத்தில் தடை, வேலை கிடைப்பதில் தடை, கல்வி கற்பதில் தடை, அதாவது உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கும் தாமதம் ஏற்படும் என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

ஆக உங்கள் வீட்டில் முன் பக்கத்திலும், வாடிய செடிகள் இருக்கக் கூடாது. பின் பக்கத்திலும் இருக்கக்கூடாது. மொட்டை மாடியிலும் இருக்கக்கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தச்  வாடிய செடிகளை எல்லாம் வேரோடு அகற்றி விடுவது மிகவும் நல்லது. வாடிய செடிகளை அகற்றுவதற்க்கு உகந்த தினம் எது? சிலபேர் இந்த கிழமையில், இந்த வேலையை செய்ய மாட்டார்கள். இருப்பினும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள தினம் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை அன்று, வாடிய செடிகளை அகற்றுவது நமக்கு நன்மையைத் தரும் என்று சில சித்தர் குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதனை பின்பற்றி கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய சமையல் அறையும், பூஜை அறையும் மட்டும் சுத்தமாக இருந்துவிட்டால் போதுமா? வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Selvam sera valimuraigal in Tamil. Selvam sera enna seiya vendum. Selvam peruga pariharam Tamil. Selvam peruga Tamil. Selvam peruga thanthram Tamil.