2 மாதத்தில், 2 மடங்கு முடி அடர்த்தியாக, இந்த 2 பொருள் சேர்த்து ஹேர் பேக் போட்டாலே போதும்.

hair-growth-sembaruthi
- Advertisement -

முடி ட்ரையாக கூடாது. முடி உடைந்து விடக்கூடாது. முடியின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். முடி நெருக்க நெருக்கமாக வளர வேண்டும் என்ற அத்தனை நல்லதும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்றால் இந்த ஒரு ஹேர் பேக் போதும். மற்ற ஹர்பாக்குகளை போல இந்த ஹேர் பேக் போட்டால் தலைபாரம் வரும் சளி பிடிக்கும் என்ற பிரச்சனையும் இருக்காது. மிக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்து சூப்பர் ஃபாஸ்ட் ஹேர் குரோத் ஹேர் பேக் எப்படி தயார் செய்வது. நேரத்தை கடத்தாமல் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு இரண்டு பொருட்கள் போதும். செம்பருத்திப்பூ மற்றும் கற்றாழை ஜெல். இந்த இரண்டுமே இயற்கையாக கிடைத்தால் மிக மிக நல்லது. அதாவது செடியிலிருந்து பறித்த செம்பருத்தி பூவை நேரடியாக குறிப்புக்கு பயன்படுத்தலாம். பறித்து ஒரு நாள் காய்ந்த செம்பருத்தி பூவையும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கற்றாழையிலிருந்து எடுத்த ஜெல்லை நேரடியாக குறிப்புக்கு பயன்படுத்தலாம். (சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒற்றைச் செம்பருத்தி பூ கிடைத்தால் மிக மிக நல்லது. இதைத்தான் நாட்டு செம்பருத்தி பூ என்று சொல்லுவார்கள்)

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களும் இயற்கையான முறையில் கிடைக்கவில்லை என்றால் கடைகளில் விற்கும் செம்பருத்தி பூ பவுடர், கத்தாழை ஜெல்லை, வாங்கி பயன்படுத்தலாம். தவறு கிடையாது. அது கொஞ்சம் ஆர்கானிக் ஆக இருக்குதா அப்படின்னு பாத்துக்கோங்க. குறிப்பாக ஆலுவேரா ஜெல்லில் எந்த ஒரு வாசனை திரவியமும் கலரும் சேர்க்காமல் இருக்க வேண்டும்.

செம்பருத்தி பூ 10 எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இதழ்கள் மட்டும் நமக்கு தேவை. நடுவே இருக்கும் மகரந்தத்தை நீக்கி விடுங்கள். செம்பருத்தி பூவை தண்ணீரில் கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு கற்றாழைக்கு நடுவே இருக்கும் ஜல்லை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அப்படியே அரைத்தால், சூப்பரான மொழு மொழு பேக் நமக்கு கிடைத்துவிடும். இதைதான் தலையில் அப்ளை செய்ய போகின்றோம். (இந்த செம்பருத்திப் பூவை தண்ணீர் ஊற்றாமல், இந்த ஜெல்லை வைத்து அரைக்கும் அளவிற்கு தேவையான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

இந்த பேக்கை தலையில் வைப்பதற்கு முன்பு உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை தலையின் வேர்க்கால்களில் படும்படி முதலில் போட்டு விடவும். பின்பு மீதம் இருக்கும் ஹேர் பேக்கை முடியின் நுனிவரை அப்ளை செய்துவிட்டு, 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு மயில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து இந்த ஹேர் பேக் போட்டு வந்தால் இரண்டே மாதத்தில் உங்களுடைய முடி அடர்த்தி, முடி வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை நிச்சயம் உணர முடியும். சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பேக் பயன்படுத்தலாம். ஆண்களும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு செம்பருத்திப்பூ கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் செம்பருத்திப்பூ இலையை கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூ பொடியை பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹேர் பேக்கில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். பொடியை நாம் ஹேர் பேக்கில் பயன்படுத்தும் போது சில சமயம் நம் முடி டிரை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கும்போது தலைமுடி டிரை ஆகாமல் தடுக்கப்படும். உங்களுக்கு இந்த ஹேர்பேக் பிடிச்சா நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -