3 ஏலக்காய்களை பூஜை அறையில் இப்படி வைத்திருந்தாலே போதும். காலத்திற்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை வராது. தேவைக்கான பணம் சேமிப்பில் குவியும்.

mahalashmi

அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? வரக்கூடிய வருமான தொகையிலிருந்து கட்டாயமாக ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராத சூழ்நிலையில், எதிர்பாராத செலவுகள் வரும் போது அதை சமாளிக்க முடியும். அந்த நேரத்தில் போய் கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். வருகின்ற வருவாயை அப்படியே செலவு செய்வதும் தவறு. வருகின்ற வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்வதும் தவறு. வரக்கூடிய வருமானத்திலிருந்து முதலில் எதிர்காலத்திற்கு தேவையான ஒரு சேமிப்பு தொகையை எடுத்து வைத்துவிட்டு மீதமிருக்கும் பணத்தில் குடும்ப செலவை கட்டுப்படுத்துவது தான் குடும்பத் தலைவி, குடும்பத் தலைவனின் திறமை.

meenakshi

இதை உணர்ந்து செயல்பட்டாலே போதும். கடன் தொல்லையில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். சரி, நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க வைக்க வேண்டும் என்றாலும், கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றாலும், நிரந்தரமான பணவரவு நம் கைக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம்? தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு உடனடி தீர்வைத் தரும் பரிகாரம், இந்தப் பதிவின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் பச்சை நிறத்தில் இருக்க கூடிய மூன்று ஏலக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். சதுர வடிவில் பச்சை பட்டு துணி அல்லது பச்சை நிற காட்டன் துணியையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருந்தால் சிறப்பானது.

mahalakshmi

இல்லை என்றால் பச்சை நிறத்தில் காமாட்சி அம்மனின் திருவுருவப்படம் இருந்தாலும் மிகவும் சிறப்பானதும்.  இந்த இரண்டு படங்களுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். தயாராக இருக்கும் பச்சை நிறத் துணியில், மூன்று ஏலக்காய்களை வைத்து பச்சை நிற நூலில் கட்டி, மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்களால் முடிந்த பிரசாதத்தை மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக வைத்து, தீப தூப ஆராதனை காட்டி பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இவை  அனைத்தையும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்தப் பூஜையை செய்யும் போது ஓம் மகாலட்சுமி தாயே போற்றி! என்று மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே செய்ய வேண்டும். இந்த ஏலக்காய் முடிச்சு உங்களுடைய பூஜை அறையில் அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை வரை அப்படியே இருக்க வேண்டும். மீண்டும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை வரும் போது, பழைய ஏலக்கங்களை எடுத்து, புதிய ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு கட்டிக் கொள்ள வேண்டும்.

Elakkai

பழைய ஏலக்காய்களை, இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதத்தில் போட்டுவிடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு டம்ளர் பாலில் இந்த ஏலக்காய் தட்டிப்போட்டு இறைவனுக்கு நிவேதனமாக வைத்து, அந்த பிரசாதத்தை நீங்கள் பருகி வரலாம்.

green

இந்த ஏலக்காய் முடிச்சு உங்கள் வீட்டில் இருக்கும் வரை உங்களுடைய கைக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். சேமிப்பு தங்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஏற்கனவே கடன் வாங்கி இருந்தாலும் கூட, அதை நீங்கள் சீக்கிரமே திருப்பி அடைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரம் இது.

elakkai-maalai

இந்தப் பரிகாரத்தை இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமை பூஜையில் இந்த ஏலக்காய்களை பச்சை துணியில் முடிந்து வைப்பதை உங்களது வழக்கமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

gajalakshmi-cash

மிகவும் பண கஷ்டத்தால் அவதி படுபவர்கள், மிகவும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், ஒரு ஒரு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் பச்சை நிற நூலில், 27 ஏலக்காய்களை மாலையாக கோர்த்து, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மனுக்கு சாத்துவது உங்களுடைய பணக் கஷ்டத்தை உடனடியாகக் குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.