1 கப் சேமியா இருந்தா போதும் சுவையான பிரதமன் செய்து அசத்தலாம்! சேமியா பிரதமன் எளிதாக எப்படி செய்யலாம்?

semiya-payasam-pradhaman
- Advertisement -

‘பிரதமன்’ என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் சேமியாவை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். ‘பிரதமன்’ கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக அடை பிரதமன் ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அதே போல இந்த சேமியா பிரதமன் நல்ல ஒரு சுவையைக் கொடுக்கும். இதை விசேஷ நாட்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். அல்லது உங்களுடைய முக்கியமான தினங்களில் செய்து கொடுத்து பாராட்டுகளை வாங்கலாம். நாவிற்கு இனிய இந்த சேமியா பிரதமன் எப்படி செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

சேமியா பிரதமன் செய்ய தேவையான பொருட்கள்:
சேமியா – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – 2 கப், தேங்காய் பால் – ஒரு கப், ஏலக்காய் – ஒரு ஸ்பூன், பசு நெய் – 2 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – ரெண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

சேமியா பிரதமன் செய்முறை விளக்கம்:
முதலில் கால் கப் அளவிற்கு பாசிப்பருப்பு எடுத்து அதை நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு அதை நன்கு மலர தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு சேமியாவை 5 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

சேமியாவை வேக வைக்கும் பொழுது இரண்டு நிமிடம் அதிகமான தீயில் வைத்து முதலில் வேக விடுங்கள். அதன் பிறகு அடுப்பை குறைத்து, குறைந்த தீயிலேயே வேகவிட்டு விடுங்கள். இன்னொரு பாத்திரத்தில் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து வெல்லம் கரைந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அதன் பிறகு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆற வைத்த வெல்ல பாகு மற்றும் பூ போல வேக வைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பு ஆகியவற்றை கொதிக்கும் சேமியாவில் சேர்த்து கலந்து விடுங்கள். அதற்குள் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். துருவி வைத்துள்ள இந்த தேங்காயை நெய்யில் வறுக்க வேண்டும். அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு நன்கு காய விடுங்கள். காய்ந்ததும் அடுப்பை குறைந்து தீயில் வைத்து துருவிய தேங்காயை சேர்த்து பொன் நிறமாக இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிட்டு எடுங்கள்.

சேமியாவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு தேங்காயை துருவி ஒரு கப் அளவிற்கு வருமாறு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நெய்யில் வறுத்த தேங்காயும் சேர்த்து ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள். சுடச்சுட இந்த சேமியா பிரதமன் சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -